• சராசரி மனிதனின் உடலில் உள்ள கந்தகத்தைக் கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த ஒரு நாயின் உடலில் உள்ள
தெள்ளுப் பூச்சிகளைக் கொல்ல முடியும்.
• நமது உடலில் உள்ள கார்பனால் 900 பென்சில்களையும், கொழுப்பைக் கொண்டு 7 சோப்புக் கட்டிகளையும், பாஸ்பரûஸக் கொண்டு 2200 தீக்குச்சிகளையும் தயாரிக்கலாம்.
• ஒரு மனிதனின் மூளையில் தோன்றும் மின்சக்தியைக் கொண்டு 10 வாட்ஸ் பல்பை எரியச்
செய்யலாம்.
• நமது வயிற்றில் சுரக்கும் அமிலம் ஒரு சேவிங் பிளேடை கரைக்கும் தன்மை கொண்டது.
• நாம் உண்ணும் உணவு நமது தொண்டையில் இருந்து வயிற்றுக்குள் செல்ல 7 விநாடிகள் தேவைப்படுகிறது.
• மனிதனின் மூளை பகலைவிட இரவில்
அதிகமாக செயல்படுகிறது.
• நல்ல ஆரோக்கியமுள்ள ஒரு நீண்ட தலைமுடி 3 கிலோ எடையைத் தாங்கும் சக்தி கொண்டது.
• ஒரு மனிதனின் உடலில் உள்ள இரும்புச் சத்தைக் கொண்டு ஒரு சிறிய ஆணியைத் தயாரிக்கலாம்.
• சராசரி மனிதனின் கட்டை விரல் நீளமும், அவனது மூக்கின் நீளமும் ஒன்றாக இருக்கும்.
• ஒரு மனிதனின் முகத்தில் வளரும் முடி, உடலின் மற்ற பாகங்களில் வளரும் முடியைவிட
வேகமாக வளரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.