ஞாயிறு கொண்டாட்டம்

அன்பும் போராட்டமும்தான் மானுடத்தின் நிரந்தரம்!

'ஏவி.எம். படப்பிடிப்பு தளம்.... இரவு 7.30 மணிக்கு சந்திக்கலாம்...' விஜய் ஆண்டனியின் எஸ்.எம்.எஸ். இன்பாக்ûஸ நிறைக்கிறது.

ஜி. அசோக்

"ஏவி.எம். படப்பிடிப்பு தளம்.... இரவு 7.30 மணிக்கு சந்திக்கலாம்...' விஜய் ஆண்டனியின் எஸ்.எம்.எஸ். இன்பாக்ûஸ நிறைக்கிறது. "எப்படி இருக்கீங்க?' என்ற என் வழக்கமான கேள்விக்கு "இந்த நொடி நிரந்தரமில்லை நண்பா. ஆனாலும் தீவிரமா, ஆழமா சந்தோஷமாக இருக்கிறேன்...' வந்து விழுந்த விஜய் ஆண்டனியின் பதில்களில் ஒளிந்திருக்கிறது அவர் கடந்து வந்த அனுபவங்களின் சாரல்.
 "நான்' பட வெற்றியைத் தாண்டி அந்த சலீம் கதாபாத்திரம் எல்லாருடைய மனதிலும் அழுத்தமாக பதிந்து விட்டது. நானே அந்த சலீமின் ரசிகன் ஆகிவிட்டேன். சலீமுக்கு இன்னொரு புரமோஷன் கிடைத்தால், அடுத்த லெவலில் அவன் என்ன செய்வான் என யோசித்ததுதான் இந்த சலீம். இயக்குநர் நிர்மல்குமார் நிறைய நேரம் எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்துக் கொண்டே இருந்தார். ஒரு நாள் சலீமை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிற மாதிரி கதை சிக்கி விட்டது. அப்படி வந்ததுதான் இந்த "சலீம்.' இது "நான்' படத்தின் இரண்டாம் பாகமா? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. இது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. "நான்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வேண்டிய அவசியம் இந்த கதைக்கு இல்லை. நல்லதோ, கெட்டதோ அப்படியொரு இமேஜ் கிடைத்திருப்பது நல்லதுதானே. இது வார்த்தை ஜாலமாகவே இருக்கலாம். ஆனால், படம் நிச்சயம் வேறு ஒரு இடத்தில் இருக்கும்'' - நம்பிக்கையுடன் கரம் குலுக்குகிறார் விஜய் ஆண்டனி.

என்னதான் சொல்லுங்க... இசையமைப்பாளர் இடமே பலருக்கும் இங்கே கனவு... அதுவும் நீங்க ஹிட்டடிக்கிற இசையமைப்பாளர்... ஏன் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என உங்களுக்குள்ளேயே கேள்வி எழுந்திருக்குமே....?
 இங்கே வரும் போது என்னிடம் எதுவும் இல்லை. நேர்மையாக உழைப்போம் என்பது மட்டும்தான் மனசு முழுக்க இருந்தது. அந்த உழைப்பு மட்டும்தான் எல்லாவற்றுக்கும் காரணம். சவுண்ட் என்ஜினீயராக இருந்து கஷ்டப்பட்டு மேலே வந்தவன் நான். இப்போது இருக்கிற இந்த இடம் கூட நாளைக்கு எனக்கு இல்லாமல் ஆகி விடலாம். ஆனால், அப்போதும் என் திறமை, உழைப்பு என்னை முன்னெடுக்கும். இட்லி கடை போட்டால் கூட அதில் நம்பிக்கை வைத்து உழைப்பேன். நீங்க ஏன் ஹீரோவாக நடிக்கணும்? என்கிற கேள்வி போகிற இடமெல்லாம் பிரதானமாக வந்து கொண்டேதான் இருக்கிறது. காலையில் இட்லி சாப்பிட்டேன். மதியமும் ஏன் நான் இட்லி சாப்பிட வேண்டும். அது மாதிரிதான் இதுவும். இந்த இடம் போதும் என நினைத்து விட்டால் வாழ்க்கையில் சலிப்பு வந்து விடும். இந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும் என நமக்கு எதுவும் விதிக்கப்படவில்லை. தொடாத இடங்கள், மீளாத கனவுகள் என ஒவ்வொருவருக்கும் ஒரு நினைப்பு இருக்கிறது. வாழ்க்கை ஒரு தேடுதல் என்பார்கள். அப்படி தேடிப் பிடித்த இடம்தான் ஹீரோ. ஒரு வேளை என் முதல் முயற்சி தோல்வியடைந்து இருந்தால், வேறு மாதிரி யோசித்திருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லையே. அப்ப, நமக்கு ஏதோ ஓர் இடம் காத்திருக்கிறது. அந்த இடம் இப்போது என் கண்ணுக்கு தெரிகிறது. இங்கே தேட வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. நாம் தேடுகிறோமா என்பதுதான் முக்கியம்.

அப்படியானால் இசையமைப்பாளர்... அவ்வளவுதானா...?
 என் அடையாளமே அதுதானே. அதை விட்டு நான் எங்கே போக முடியும்? எதிலும் ஒழுங்கு, நேர்த்தி எனக்குப் பிடிக்கும். ஒரு விஷயத்தை ஏன்? எதற்கு? என கேள்விக் கேட்காமல் என்னால் செய்ய முடியாது. ஹீரோவாக என்னை நான் முன்னெடுக்கிற நேரத்தில் தயாரிப்பாளராகவும் நான் திருப்தி அடைய வேண்டியிருக்கிறது. அதற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. நான் ஹீரோவாக நடிக்கிற, தயாரிக்கிற படங்களுக்கு நான்தான் இசையமைக்கிறேன். ஹீரோவாக நடிப்பதால் இசையமைக்கிற படங்கள் குறைந்திருக்கலாம். மற்றபடி இசையமைப்பாளர் எனக்குள்ளேதான் இருக்கிறான்.

சமூகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிற ஒரு விஷயத்தை அழுத்தமாக எடுத்து வைத்தது "நான்'... அதே அழுத்தம் சலீமில் இருக்குமா...?
 அது வேண்டும், இது வேண்டும் என்கிற தேடலில் எதுவுமே கிடைக்காத போது ஒரு தனி மனிதனுக்கு நேர்ந்த அனுபவங்கள்தான் "நான்'. கொஞ்சம் துரோகமும் கூடவே இருந்தது. சலீம் வேறு இடத்தில் இருக்கும். போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு? அன்பும், போராட்டமும்தான் இந்த மானுடத்தின் நிரந்தரம். நல்லவனாக வாழத்தான் எல்லாருக்கும் ஆசை. ஆனால் காலம் கண்ணெதிரே எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டு ஒன்றும் அறியாத சிறு பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறோமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினோமோ அதை வெறுக்கிறோம். ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததைக் கொடுத்து, கேட்டதை மறைத்து விளையாடுகிற இந்த காலம் ஒரு தனிமனிதனுக்கு எதைப் பரிசளித்தது என்பதுதான் இங்கே கதை களமாக இருக்கும்.

ஹீரோ, ஹீரோயின்களுக்கு எல்லாம் கிடைத்து விடும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குதான் ரொம்பவே சிரமம்... என வெளிப்படையாகப் பேசியிருந்தீர்கள்... இந்த அபூர்வமான பேச்சு அரிதுதான்...?
 சினிமாவை வேலையாக, வாழ்க்கையாக வைத்திருக்கும் ஏராளமான தொழிலாளர்களைப் பார்ப்பதற்கு எனக்கு நெகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. பெரிய லாபம் புண்ணாக்கெல்லாம் கிடையாது. ஒவ்வொருவரும் தங்களது வேலையைப் பார்த்து முடிப்பதற்குள் உயிர் போய்விடும். ஆனாலும் அந்த தொழிலாளர்கள் அதில்தான் வாழ்கிறார்கள். இப்போது நான் ஹீரோ. இந்த இடத்தில் இருந்து பேசுவது கூட சரியில்லைதான். ஆனாலும் அவர்களின் வலியை, வாழ்க்கையை பக்கத்தில் இருந்து பார்த்தேன். கேரவன், நினைத்த நேரத்துக்கு எல்லாம்... என்கிற என் நிலையிலிருந்து விலகி நின்று பார்த்தேன். சின்ன திட்டம் கூட இல்லை. என் பட கலைஞர்களை பற்றி பேசும் போது, தானாகவே வந்து விட்டது அந்த உண்மை. இது விளம்பரம் இல்லை.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT