ஞாயிறு கொண்டாட்டம்

டாக்டரிடம் பீஸ் வாங்கிய காந்தி

1933-ஆம் ஆண்டு காந்தியடிகள் சுற்றுப் பயணத்தின் போது மிகவும் களைப்பாகக் காணப்பட்டார்.

தினமணி

1933-ஆம் ஆண்டு காந்தியடிகள் சுற்றுப் பயணத்தின் போது மிகவும் களைப்பாகக் காணப்பட்டார். அப்போது அவர் லாகூரில் தங்கியிருந்தார். காந்திஜியின் உடல்நிலையை உணர்ந்து கொண்ட ஒரு புகழ்பெற்ற டாக்டர் அவரிடம் வந்து, ""மகாத்மா ஜி, உங்களை நான் வைத்தியப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்'' என்றார்.

""சரி ! செய்யுங்கள். எனக்கு உடம்பு அப்படி ஒன்றும் மோசமாக இல்லை'' என்றார் காந்திஜி.

""பரிசோதனை செய்து பார்க்காத வரையில் எங்களுக்கு சமாதானமாயிராது'' என்றார் டாக்டர்.

""சமாதானத்திற்கென்றால் சரி! ஆனால் எனக்கு பீஸ் கொடுக்காமல் நான் யாரையும் பரிசோதிக்க விடுவதில்லை. என்னைப் பார்க்க வந்தவர்கள் எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கும்போது, உங்களுக்காக எதற்கு நேரத்தை வீணாக்க வேண்டும்?'' என்று காந்தியடிகள் கேட்டார்.

காந்திஜியின் விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்து, தன் பையில் அப்போதிருந்த 16 ரூபாயை காந்தியின் முன்னே வைத்து, ஒரு நோயாளியைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் எனக்குக் கொடுத்த பீûஸ உங்கள் முன் வைத்துவிட்டேன்'' என்றார்.

காந்தியடிகளும் அந்தப் பணத்தை மிகுந்த திருப்தியோடு எடுத்துக் கொண்டார். அதை அப்படியே அரிஜன நிதியில் சேர்த்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடங்குளம் அணு உலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழக கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!

கோவையில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி கொலை!

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை! மெட்டல், பார்மா துறை பங்குகள் உயர்வு!

விவசாய பணிகளில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு அரசு வழி காட்ட வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT