முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சுற்றுச்சுழல் பாதுகாப்பை வலியுறுத்திய "பேஷன் ஷோ'!

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகைத் திரும்பிப் பார்க்க

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரங்கள் தமிழ்நாட்டிலும் கிடைக்கும்படி செய்து வருபவர்கள் பாரம்பரிய மிக்க சிகையலங்கார சேவை மையமான டோனி அண்ட் கய் "எஸ்ஸôன்சுவல்' நிறுவனம். இங்கிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கெனவே 50 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம் புதிய 51-ஆவது கிளையை மேற்கு அண்ணாநகரில் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு வித்தியாசமான முறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "பேஷன் ஷோ' நடைபெற்றது. இதுகுறித்து அதன் உரிமையாளர் சோஃபியா நம்முடன் பகிர்ந்து கொண்டவை :  

""நான்  வங்கி ஊழியராகப் பணியாற்றியவள். என் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் ஒருகட்டத்தில் வங்கிப் பணியை விடவேண்டிய சூழ்நிலை. தற்போது என் குழந்தைகள் சற்று வளர்ந்துவிட்டதால் மறுபடியும் ஏதாவது பணி செய்யலாம் என்று நினைத்தேன். அப்போது என் மைத்துனர் டிமாண்டி, "டோனி அண்ட் கய்' டீலர்சிப்  பற்றி சொன்னார். அதன் உரிமையாளர் சாம்பால் நல்ல முறையில் இந்த நிறுவனத்தை நடத்தி வருவது குறித்தும் கூறினார். எனக்கு அது பிடித்திருந்தது. அதனால் நானும் என் மைத்துனரும் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

 முதல் நாளில் ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதேசமயத்தில் அது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இதனால் கண்ணைக் கவரும் உடைகளுடனும், கருத்தைக் கவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும் மேடையில் வலம் வந்தனர். வெறும் ஆடை அலங்காரம், சிகையலங்காரம் என்பதைத் தாண்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த பேஷன் ஷோ நடைபெற்றது.

மழைநீர் சேமிப்பு, மரங்கள் பாதுகாப்பு, உயிரினங்கள் பாதுகாப்பு, பயனற்ற பொருள்களை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மின்சார சேமிப்பு போன்ற  கான்சப்ட் எடுத்து அதனை தங்களது ஆடை அலங்காரம் மூலம் தத்ரூபமாகக் கொண்டு வந்து மேடையில் பேஷன் ஷோ மூலமே சிறிய நாடகம் போன்று நடத்திக் காட்டினார்கள். 

அதாவது ஒரு பெண், நீர் போன்ற ஆடையை வடிவமைத்து அணிந்திருந்தாள், மற்றொரு பெண் மரம் போன்று, ஓர் இளைஞர் பழைய உபயோகமற்ற கிழிந்த ஆடைகளைத் திரட்டி அதை மறுசுழற்சி செய்யும் வகையில் அணிந்து கொண்டு வந்தார், மற்றொரு இளைஞர் கஉஈ பல்புகளை ஆடையில் வைத்து தைத்து அணிந்திருந்தார். இதில் முக்கிய அம்சமாக சுற்றுச்சூழலை பாதுகாத்தல்தான் நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் மிகப் பெரிய சொத்து என்பதை மையக்கருத்தாகக் கொண்டிருந்தனர். இந்த நாடகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள "பேர்ல்ஸ் அகாதெமி' சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்து நடத்திக் கொடுத்தனர்.  நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் அதனை வெகுவாகப் பாராட்டினர்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.