முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நோய்களைக் குணப்படுத்தும் "புஃட் ரிஃப்லக்ஸாலஜி'!

""புஃட் ரிஃப்லக்ஸôலஜி என்னும் புட் தெரபி மூலம் ஒருவரின் அனைத்து விதமான பிரச்னைகளையும் குணப்படுத்த முடியும்'' என்கிறார் பார்வையற்ற மாற்று திறனாளியான துர்கா தேவி. கடந்த மூன்று ஆண்டுகளில் 1000 பேருக்கும் மேல் சிகிச்சை அளித்து குணப்படுத்தியிருக்கிறார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

""புஃட் ரிஃப்லக்ஸôலஜி என்னும் புட் தெரபி மூலம் ஒருவரின் அனைத்து விதமான பிரச்னைகளையும் குணப்படுத்த முடியும்'' என்கிறார் பார்வையற்ற மாற்று திறனாளியான துர்கா தேவி. கடந்த மூன்று ஆண்டுகளில் 1000 பேருக்கும் மேல் சிகிச்சை அளித்து குணப்படுத்தியிருக்கிறார். இதனைப் பாராட்டி சமீபத்தில் "சொரிஞ்சி கேம்போ' என்னும் சீனாவைச் சேர்ந்த போதி தர்மர் வழிவந்த புத்த அமைப்பு அவருக்கு சிறந்த "புஃட் தெரபிஸ்ட்' விருது வழங்கி கௌரவaித்துள்ளது. இது குறித்து துர்கா தேவி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். எப்போதும் என் அம்மாவுக்கு என்னைப் பற்றிய கவலைதான். அதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாக இருக்கும். அந்த சமயத்தில்தான் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் சஐயஏத இன்ஸ்ட்டியூட் பற்றி கேள்விப்பட்டு ஏதாவது ஒரு தொழில் பயிற்சி பெறச் சென்றேன்.

அங்கே 45 நாள் கோர்ஸôன நாற்காலி பின்னும் தொழிலைக் கற்றுக் கொண்டேன். சிறிது நாள்கள் கழித்து. அந்த இன்ஸ்டிடியூட்டில் இருந்து அழைத்திருந்தார்கள் என்று போனேன். அங்கே "மினிஸ்ட்ரி ஆப் சோஷியல் ஜஸ்டிஸ்' என்ற மத்திய அரசைச் சேர்ந்த அமைப்பானது மாற்று திறனாளிகள் சாலையில் பிச்சை எடுக்கக் கூடாது என்றும் அவர்கள் சுய தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வர்மகலையின் ஒரு பிரிவான அனிச்சை ஊக்க சிகிச்சை அன்ற்ர் ஐம்ம்ன்ய்ங் நஹ்ள்ற்ங்ம் மூலம் உடலில் ஏற்படும் பலவித நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் அதில் விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என்றார்கள்.

முதலில் இதெல்லாம் எனக்குச் சரியாக வராது என்று இருந்துவிட்டேன். அதுவுமில்லாமல் தினசரி அம்மாவை அழைத்து போகச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டுமே என்றும் அமைதியாக இருந்தேன். ஆனால் அம்மாதான் சொன்னார்கள். போய் பார்க்கலாம் என்று. அங்கே போனதும் வர்ம சிகிச்சையின் பயிற்சி ஆசிரியரான மேக்ஸ் சார் எங்களிடம் பயிற்சி முறையைப் பற்றி விளக்கினார். உங்களால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தினார்.

அதன்பின் 3 மாத பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். வர்மாவில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன. அதில் ஒரு பிரிவான புஃட் ரிஃப்லாக்ஸôலஜி (ஊர்ர்ற் தங்ச்ப்ங்ஷ்ஹப்ர்ஞ்ஹ்) சிகிச்சைக்கான பயிற்சியை எங்களுக்கு அளித்தார்கள். புஃட் ரிஃப்லக்ஸôலஜி என்பது கை, கால் பாதங்களில் இருக்கும் நரம்பு மண்டலங்களைத் தூண்டிவிட்டு. அனிச்சை ஊக்க சிகிச்சையின் மூலம் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுவது.

இதன் மூலம் கை,கால் செயலிழந்தவர்கள், தைராய்டு,பெடிக்கியூர், வீசிங், சைனஸ், கிட்னி, லிவர், நுரையீரல் பிரச்னை,மூட்டு வலி, வெட்டு, ஒற்றைத் தலைவலி, ஹார்ட் அட்டாக் என பலவித நோய்களையும் அறுவை சிகிச்சையின்றி, மாத்திரை மருந்துகள் இன்றி குணப்படுத்த முடியும். கால்களில் உணர்வு அதிகம் என்பதால் பெரும்பாலும் கால்களில்தான் சிகிச்சை அளிப்பார்கள். கால்களில் புண் இருந்தால், கைகளில் கொடுக்கலாம். கை, கால் இழந்தவர்களுக்கு காது மூலம் கொடுக்கலாம்.

இதற்கான பயிற்சியை 2 மாதம் இன்ஸ்டிடியூட்டிலும், பின் ஒரு மாதம் கடலூர் சென்றும் எடுத்துக் கொண்டேன். மேலும் பயிற்சியின் போது எப்படி ஆடை அணிய வேண்டும், எப்படிப் பேச வேண்டும், சாலையில் எப்படி ஸ்டிக் போட்டு நடப்பது என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். அதன்பிறகு அம்மாவின் உதவியில்லாமல் நானே தனியாக அனைத்து இடங்களுக்கும் செல்லும் தைரியம் வந்துவிட்டது.

பயிற்சி முடித்துவிட்டு சென்னை "எக்ஸ்பிரஸ் அவின்யூ'வில் இருந்த நேச்சுரல்ஸில் 2 ஆண்டுகள் புஃட் ரிஃப்லக்ஸôலஜி சிகிச்சை அளித்து வந்தேன். மேலும் புல் பாடி மசாஜ், ஹெட் மசாஜ், புட் மசாஜ் செய்வேன், கடந்த 3 ஆண்டுகளில் இது வரை 1000 பேருக்கும் மேல் குணப்படுத்தி இருக்கிறேன்.

தற்போது அவரவர் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறேன். அஞ்சல் வழி மூலம் பி.ஏ. தமிழ் படித்து வருகிறேன். என்னைப்போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இப்போது நான் அறிவுரை சொல்கிறேன். இதைக் கண்டு என் அம்மாவுக்கு என் எதிர்காலத்தை பற்றிய பயம் போய்விட்டது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.