ஞாயிறு கொண்டாட்டம்

நூறு ஆண்டுகள் நிழல் தரும் ஆலமரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்திரமேரூருக்கு அருகில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள அம்மையப்ப நல்லூரில் காணப்படும் ஆலமரத்தைக் கண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்திரமேரூருக்கு அருகில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள அம்மையப்ப நல்லூரில் காணப்படும் ஆலமரத்தைக் கண்டால் ஆச்சரியப்படுவீர்கள். நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கல்லால மரம் அவ்வூர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கல்லால மரத்தின் ஒவ்வொரு கிளைகளிலிருந்து தொங்கும் விழுதுகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

பொதுவாக திருக்கோயில்களில் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பது போன்ற சிற்ப வடிவங்கள் காணப்படும். இவ்வூரில் பூரணை - புஷ்கலை சமேத அய்யனார் எழுந்தருளியுள்ளார். அவருடைய வாகனமான குதிரை சுதை உருவங்களும் உள்ளன. ஊர் மக்களின் சிறப்பு வழிபாட்டினை இக்கோயில் பெறுகிறது.

பெரிய ஆலமரத்தின் அருகே சாலை செல்கிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் மரத்தின் ஊடே நுழைந்து வரும் காட்சி மகிழ்ச்சி அளிக்கும். வாகனங்களில் செல்வோர் இங்கு நிறுத்தி அய்யனாரை வழிபட்டுச் செல்கின்றனர்.
- கி. ஸ்ரீதரன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT