இளம் வயதில் ஐன்ஸ்டின் 
ஞாயிறு கொண்டாட்டம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டினும் ஏலமும்!

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உலகம் அறிந்த விஞ்ஞானி. அதுமட்டுமல்ல;  அவரின் அசாதாரணமான நடத்தைகள், மதம்

ராஜிராதா

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உலகம் அறிந்த விஞ்ஞானி. அதுமட்டுமல்ல;  அவரின் அசாதாரணமான நடத்தைகள், மதம் பற்றிய பரபரப்புக் கருத்துகள், அவரின் சிறந்த பணிகளுக்காகவும் என்றென்றும் நினைவில் நிற்பவராக இருந்து வருகிறார்.

அரிய ஓவியங்களையும் - அரிய கலைப் பொருட்களையும் - புகைப்படங்களையும் சேகரிப்போர் உலக அளவில் இதற்கான  ஏலம் எங்கே நடந்தாலும் கூடிவிடுவர். சிலர் இதனை நிரந்தரமாய் பாதுகாப்பர். மேலும் பலரோ அதிக விலை கிடைக்கும் சமயம் விற்று விடுவர்.  இந்த வகையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சார்ந்த சில சுவையான ஏல விற்பனைகளை பார்ப்போம்:

கையெழுத்திட்ட படம்:

ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் 72-ஆவது பிறந்த நாள் தொடர்பாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஒரு விழா எடுத்தது. நிகழ்வைப் புகைப்படம் எடுக்க வந்தவர். ஐன்ஸ்டினையும், புகைப்படம் எடுத்தார். இதனை அறிந்த அவர் திடீரென தன் நாக்கை வெளியே நீட்டி கோமாளி செய்தார்.

இந்த புகைப்படத்தை பல்கலைக்கழகம் முதலில் வெளியிடவே தயங்கியது. ஆனால், புகைப்படத்தை ஐன்ஸ்டின் ரசித்து இரண்டு, மூன்று காப்பி தனக்கு வேண்டும் எனக் கேட்க, புகைப்படக்காரர் கொடுக்க, ஒரு புகைப்படப் பிரதியில் தனது கையொப்பமிட்டு அவரிடம் கொடுத்தார்! இது லாஸ்ஏஞ்சல்ஸ் நாடே. டி. சான்டர்ஸ் ஏலக் கடையில் விற்பனைக்கு வந்தபோது, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் இதனை 1,25,000 டாலர் கொடுத்து வாங்கினார்.  (ஒரு டாலர்:  65 ரூபாய்).

16 வயதினிலே: ஐன்ஸ்டினின் திறமை 16 வயதிலேயே வெளி உலகுக்குத்  தெரிய வரலாயிற்று. இந்த வகையில் இவர் எழுதிய   "On the  investigation of the state of ether in a magnetic field' என்ற கட்டுரை 1895-ஆம் ஆண்டு ஒரு விஞ்ஞான இதழில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. புகழப்பட்டது.

இது சார்ந்து இவர் எழுதிய கையெழுத்துப் பிரதியை, கிரிஸ்டி ஏலக் கடையின் மூலம் விற்பனைக்கு வந்தது. 2006-ஆம் ஆண்டில் ஒருவர் இதனை 6,76,992 டாலர் கொடுத்து வாங்கிக் கொண்டார்.

அணுகுண்டு பற்றி ரூஸ்வெல்ட்டுக்கு எழுதிய கடிதம்:

1939-ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்கு, ஐன்ஸ்டின் ஒரு கடிதம் எழுதினார். இதில் அணுகுண்டு தயாரிப்பில் இறங்க வேண்டியதை வலியுறுத்தி, இதன் ஆய்வுக்கு ஒரு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

இக்கடிதம்  1986-இல் ஏலத்துக்கு வந்தபோது இதனை "போர்ப்ஸ்' இதழ் அதிபர் மால்கம் போர்ப்ஸ், 2,20,000 டாலருக்கு ஏலத்தில் வாங்கினார். பிறகு 2002-ஆம் ஆண்டு மறு ஏலத்தில் இதனை 20, 96,000 டாலருக்கு விற்று விட்டார்!

தியரி ஆஃப்  ரிலேடிவிடி:

ஐன்ஸ்டின் "தியரி ஆஃப் ரிலேடிவிடி' பற்றி எழுதிய குறிப்பை எங்கோ தொலைத்துவிட்டார். பிறகு அதனை மறுபடியும்  எழுதினார்.
கால, இட, அளவைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பது ஐன்ஸ்டினின் கொள்கை.

இரண்டாவது உலக யுத்தத்தின்போது அமெரிக்க அரசுக்கு உதவ இதனை வழங்க விரும்பினார் ஐன்ஸ்டின்.

சிட்டி லைஃப் இன்சூரன்ஸ் தலைவர் வால்டர் பிக்ஸ்பை  - 6.5 மில்லியன் டாலர் கொடுத்து இதனைப் பெற்று அமெரிக்க அரசிடம் கொடுத்துவிட்டார்! இதனை இன்றும் அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் பார்வைக்கு வைத்துள்ளனர்;  பாதுகாத்தும் வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT