முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கரோனா எப்போது முடிவுக்கு வரும்? 

மருத்துவ உலகிற்கு சவாலான காலம் இது. கரோனா வைரûஸ கட்டுப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On : 19 ஏப்ரல், 2020 at 8:39 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:58 PM

மருத்துவ உலகிற்கு சவாலான காலம் இது. கரோனா வைரûஸ கட்டுப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் பரவுவதால், உயிர்பலி அதிகமாகி கொண்டே  போகிறது. கரோனாவில் இருந்து எப்போது விடிவு கிடைக்கும்  உலகம் முழுவதும் உள்ள மக்கள் மனதில் உலவும் ஒரே கேள்வி இதுதான். விஞ்ஞான் பிரசாரில் பணியாற்றும் முதுநிலை 

விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சொல்லும் பதில் என்ன? 

இந்தியாவில்  கரோனா வைரஸ் பரவல்  எப்படி இருக்கிறது? 

Advertisement

கரோனா நோய் பரவலைப் பார்ப்பதற்குச் சாதாரணமாக இருக்கலாம், முதல் நாள் ஒருவருக்கு தொற்று இருக்கும், 3வது நாள் 4 பேருக்கு இருக்கும்.  உலக நாடுகள் இந்த நோயைப் பார்த்து அலறுகின்றன. ஆனால் இதே விகிதத்தில் நோய் பரவலைக் கணக்கிட்டால் 12-வது நாளில் 1 லட்சம் பேருக்கு நோய் பரவல் ஏற்பட்டிருக்கும். மற்ற நாடுகளைப் போலத் தான் இந்தியாவிலும் நோய் பரவலானது தொடங்கி இருக்கிறது. ஆனால் அமெரிக்கா, இத்தாலியை பார்க்கும் போது அவர்கள் செய்த தவறை இந்தியா செய்யவில்லை. சுதாரித்து கொண்டு முன்னரே ஊரடங்கு நடவடிக்கையை  எடுத்ததால் பெரும் விளைவு தவிர்க்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன்னர் 1917-1920 ஆண்டுகளில் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டது. இந்தியாவில் மட்டும் இந்த நோய் 1.7 கோடி உயிர்ப்பலிகளையும், உலகம் முழுவதும் ஏறத்தாழ 5 கோடி பேரை காவு வாங்கியது. அந்தக் காலத்தில் வைரஸ் பற்றிய அறிவும் இல்லை. அது எப்படி பரவுகிறது என்பதை கட்டுப்படுத்துவதற்கான வழிகளும் இல்லை. கரோனா வைரஸ் மனிதனிடம் இருந்தே மற்றவர்களுக்குப் பரவுகிறது என்பதை 20 நாட்களில் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் என்ற வழியையும் கண்டறிந்திருப்பதால் உயிர்ப்பலிகள் அன்றைய காலகட்டம் போல இல்லை. எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகளோ தடுப்பூசிகளோ இல்லை. ஆனால், மனிதனின் முயற்சியால் இந்தியாவிற்குள் எய்ட்ஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதே மாதிரியான முயற்சி தான் தற்போதும் தேவைப்படுகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் இந்தியர்களை கரோனா தாக்காதா?
இந்தியாவில் அதிக வெயில் இருப்பதால் நோய் தாக்காது. இங்குள்ளவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் கரோனா தாக்காது.  பிசிஜி தடுப்பூசி போடப்படுவதால் நோய் தாக்காது என்றெல்லாம் மக்கள் மத்தியில் நிலவும் கருத்துகள்  அனைத்தும் நமக்கு இருக்கும் ஆசை தானே தவிர வேறெதுவும் இல்லை. இந்த  தகவல்கள் உண்மை தான் என்பதற்கான அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. நாம் எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே நோயை கட்டுப்படுத்தும். நம்மை காப்பாற்றும். 

கரோனா வைரஸின் தன்மை தான் என்ன? 

கரோனா வைரஸ் மனித உடம்பில் மட்டுமே உயிர் வாழ்கிறது. மனிதனின் உடலில் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை மட்டுமே இந்த வைரஸ் உயிர் வாழும். இந்த நாட்களுக்குள் ஒன்று வைரஸ் மனிதனை வென்றுவிடும், அல்லது மனிதன் தனக்கு ஏற்கெனவே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை வைத்து வைரûஸ வென்று விடுவான். இது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 

பருவநிலை மாற்றத்திற்கும் வைரஸிற்கும் தொடர்பு இருக்கிறதா? 

எந்த வைரஸிற்குமே முதல் முறை பரவும் போது பருவநிலைக்கும் அதற்கும் தொடர்பு இருக்காது, 2வது அல்லது மூன்றாவது முறை அதே வைரஸ் பரவும் போது பருவநிலைக்கு ஏற்ப இயற்கையாகவே அது மாறி இருக்கும். 

கரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

சுடுநீர் மட்டுமே ஒரே மருந்து, ஏனெனில் பலருக்கு கரோனா பாதித்ததன் அறிகுறியே இருக்காது லேசான சளி, காய்ச்சல் போல வந்து போய்விடும். 100 பேரில் 15 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் வென்டிலேட்டர் பொருத்த வேண்டும். 100-இல் 5 பேர் மட்டுமே தீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருப்பார்கள். உலகம் முழுவதிலும் 9 வயதிற்குக் கீழ்ப்பட்ட எந்த குழந்தையும் 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் மோசமான நிலைக்குத் தள்ளப்படவில்லை. 

கரோனா தாக்கம் எப்போது முடிவுக்கு வரும்? 

கரோனா வைரஸில் உயிர்ப்பலி இல்லாவிட்டாலும் பரவல் விகிதம் அதிகம். சார்ஸ் அளவிற்கு உயிர்ப்பலி இல்லாவிட்டாலும் பரவல் விகிதம் கரோனாவில் அதிகம். நாம் சூழ்நிலைக்கேற்ப யதார்த்தத்தை உணர வேண்டும். சீனாவில் முதன்முதலில் டிசம்பர் மாதத்தில் நோய் பரவலானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் கரோனா நோய் பரவலே மார்ச் மாத இறுதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஊரடங்கு, சமூக விலகல் மூலம் இவை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும் வைரஸ் பரவல் குறைந்து நாம் சகஜ நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 7 அல்லது 8 மாதங்கள் ஆகும். கரோனா உலகளாவிய பிரச்னை என்பதால் உலகளாவிய அளவிலேயே தீர்வு காண முடியும். உலகில் ஒருவருக்குக் கூட கரோனா இல்லை என்றால் தான் இது கட்டுக்குள் வரும் இல்லையென்றால் சங்கிலித் தொடர் போல நோய் பரவல் சுற்றிக் கொண்டே தான் இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.