ஞாயிறு கொண்டாட்டம்

பணம் மீது ஆர்வம் இல்லை: பிரியாமணி

"கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியாமணி.

DIN

"கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியாமணி. "பருத்திவீரன்' படத்தில் நடித்துப் பிரபலமானார். இந்தப் படத்துக்காக அவருக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

கரோனா பொது முடக்கத்தில்  பிரியாமணி அளித்துள்ள பேட்டி:  

""இப்போது கதைகள் கேட்கிறேன். சினிமா துறையில் ஒரு காலத்தில் கதாநாயகனுக்கு ஒரு மரியாதை கதாநாயகிக்கு ஒரு மரியாதை என்று வித்தியாசம் இருந்தது. அது இப்போது மாறுகிறது. காஜல் அகர்வால், தமன்னா, நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் மார்க்கெட்டை பொறுத்து சம்பளம் வாங்குகிறார்கள். இதைப் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். 

எனக்கு பணத்தின் மீது ஆர்வம் இல்லை. இப்போது எனக்குக் கொடுக்கும் சம்பளத்தில் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு நல்ல கணவர். குடும்பம் கிடைத்து உள்ளது. திருமணமாகி 3-ஆவது நாளே படப்பிடிப்புக்கு போனேன். கணவர் குடும்பத்தில் எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதனால் சினிமாவில் நீடிக்க விரும்புகிறேன். படப்பிடிப்புகளை இப்போது ஆரம்பிப்பதுபோல் தெரியவில்லை. இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்'' என்றார் பிரியாமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT