முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விஞ்ஞானத்தின் எதிர்வினை

எல்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக  உருவாகி வரும் படம் "பச்சைக்கிளி'.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

எல்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் "பச்சைக்கிளி'. ஜிப்ஸி ராஜ்குமார், ஹேமா, பாலூர் பாபு, முத்துக்காளை, கோட்டை பெருமாள், கோவை செந்தில், நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் செல்வம். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப மேம்பாட்டு அறிவும், மேல்நாடுகளில் எத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளதோ அதே அளவு எதிர்வினையையும் உருவாக்க தவறவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் கலாசார சீர்கேடுகளும், அதில் பெண்கள் எளிதாக ஏமாற்றப்பட்டு... சீர்குலைத்து கொல்லப்படுவதும் கூட பத்திரிகை செய்திகளாக பார்க்கிறோம்.

இந்த விஷயத்தை கிராமப் பின்னணியில் சிறப்பான பாடல்களுடன் நல்ல இசையோடும் தெளிவான கருத்துக்களோடும், பெண்கள் படுகின்ற துயரங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டியுள்ளனர். அதே பாராட்டு, வரவேற்பை தமிழக ரசிகர்களும் தருவார்கள் என நம்புகிறோம்'' என்றார் இயக்குநர்.

முழு கட்டுரையைப் படிக்க →