ஞாயிறு கொண்டாட்டம்

ஜோதிகாவின் சம்பளம் என்ன? 

"பொன்மகள் வந்தாள்' படத்தையொட்டி சூர்யாவும் ஜோதிகாவும் நேரலையில் பேட்டி அளித்தனர்.

DIN

"பொன்மகள் வந்தாள்' படத்தையொட்டி சூர்யாவும் ஜோதிகாவும் நேரலையில் பேட்டி அளித்தனர். அப்போது "36 வயதினிலே' படத்துக்கு என்ன சம்பளம் தந்தீர்கள் என்பது பற்றி அப்போது கூறியிருந்தீர்கள், அது இப்போது மாறியிருக்கிறதா? "பொன்மகள் வந்தாள்' படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன?' என்று சூர்யா } ஜோதிகா தம்பதியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சூர்யா, "2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தை வைத்துத்தான் நடக்கிறது.

நாங்கள் எங்களுக்குள் மாற்றி மாற்றி பண சுழற்சி செய்வோம்' என்று பதிலளித்தார். உடனே ஜோதிகா, "இல்லை இல்லை, எனக்கு கிடைத்த மிகப்பெரிய சம்பளமே சூர்யாவின் ஒட்டுமொத்த ரசிகர் மன்றங்கள் தான்.

தமிழ்நாட்டில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் இருக்காது. எனது ஒரு ட்ரெய்லர், டீசர் வந்தால் என்னுடைய ரசிகர்கள் பார்ப்பதற்குள் சூர்யாவின் ரசிகர்கள் தான் அதற்குப் பெரிய வரவேற்பைக் கொடுக்கிறார்கள்' என்று கூறினார். இறுதியாக சூர்யா, "ஆனால் ஜோதிகாவின் வங்கிக் கணக்குக்கு நன்றி. அதை வைத்து 2டி நிறுவனத்தை நாங்கள் தொடர்ந்து நடத்துகிறோம்' என்று குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT