ஞாயிறு கொண்டாட்டம்

ஞாபக சக்தியை வளர்க்க மூன்று உத்திகள்

ஒரு சராசரி மனிதன் பரம்பரையாகப் பெற்ற தனது ஞாபக சக்தியில் பத்து சதவீதத்திற்கு மேல் பயன்படுத்துவது கிடை

DIN

ஒரு சராசரி மனிதன் பரம்பரையாகப் பெற்ற தனது ஞாபக சக்தியில் பத்து சதவீதத்திற்கு மேல் பயன்படுத்துவது கிடையாது. ஞாபகமூட்டக்கூடிய இயற்கை விதிகளை மீறி அவர் 90 சதவித ஞாபக சக்தியை வீணடித்து விடுகின்றார் என்று உளவியல் பேராசிரியர் சீஷோர் குறிப்பிடுகின்றார்.
நாள்தோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மறதியுடன் நடத்துகின்ற போராட்டங்கள் எத்தனை நிமோனிக்ஸ் முறைகளைக் கையாண்டு உங்களுடைய ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். 
"நிமோனிக்ஸ்" என்ற வார்த்தை "நெமோனிகோஸ்' என்ற கிரேக்க சொல்லில் இருந்து தோன்றியது. இதற்கு ஞாபக சக்தி அல்லது நினைவுத்திறன் என்று பொருள் கொள்ளலாம். 
இம்முறையில் மூன்று உத்திகள் கையாளப்படுகின்றன. ஒரு வார்த்தை "அக்ரோனிம்' ஒரு வாக்கியம் "அக்ரோஸ்டின்' ஒரு கற்பனை உருவத்துடன் தொடர்பு படுத்தவும் "அசோசியேஷன்' ஆகியவை "நிமோனிக்ஸில்' அடங்குகின்றன. இம்மூன்றையும் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம். 
நினைவு வைக்க வேண்டிய வார்த்தைகளின் முதல் எழுத்துகளை வைத்து புதிய வார்த்தை ஒன்றை உருவாக்குதலை "அக்ரோனிம்' என்றழைப்பர். 
இதற்கு மிகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டு வானவில்லின் ஏழு நிறங்கள் கொண்ட வார்த்தை ஆகும்.
வானவில்லின் violet. Indigo,blue,green, yellow, orange, Red ஆகிய ஏழு நிறங்களை ஞாபகம் வைக்க இவற்றின் முதல் எழுத்துகளை மட்டும் ஒன்று சேர்த்து VIBGYOR என்ற வார்த்தை உருவாக்கப்பட்டு, இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏழு நிறங்களின் பெயர்கள் மட்டுமின்றி அமைந்துள்ள வரிசையையும் நினைவில் வைக்கலாம்.
நினைவில் வைக்க வேண்டிய பல்வேறு வார்த்தைகளை அதன் முதல் எழுத்துகளை ஆரம்ப எழுத்தாக வைத்து, ஒரு வாக்கியம் அமைத்து நினைவில் வைத்தல் "அக்ரோஸ்டிக்' எனப்படும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். உயிரினங்களில் செல் பிரிதல் முக்கியமான நிகழ்ச்சி ஆகும். 
இதன் பல்வேறு நிலைகளை Interphase. Prophase. Metaphase, anaphase, telophase வரிசைப்படி நினைவில் கொள்ள இவற்றில் உள்ள முதல் எழுத்துக்களான I,P,M,A,T ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்ட "அக்ரோஸ்டிக்' வார்த்தை இதோ!
I passed my arithmetic test மேற்கூறிய இரு உத்திகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள், முக்கியமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கையாளுகின்றனர். 
பெயர்களையும் முகங்களையும் நினைவில் வைக்க "அசோசியேஷன்' பயன்படுத்தப்படுகின்றது. இங்கு ஒரு கற்பனை உருவத்துடன் தொடர்பு படுத்தி குறிப்பிட்ட நபரை நினைவில் வைக்கலாம். புதிய நபர்களை சந்திக்கும் போது முகம், உடலமைப்பு மற்றும் உடலசைவு ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து வித்தியாசமாக இருக்கும் ஏதாவது ஒரு சிறப்பு அம்சத்தை அவரது பெயருடன் தொடர்புபடுத்தி நினைவு கொள்ளலாம்.
இது போல் அவரவர்க்கு வசதியாக நினைவில் நிறுத்திக்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. சம்பந்தபட்டவர்கள் மனம் புண்படாமல் கவனமாக இருத்தல் அவசியம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஞாபக மறதியால் நாம் அனைவரும் சராசரி மனிதர்களாகி விடுகிறோம். எல்லாத் துறைகளிலும் அபார ஞாபகத்திறன் பெற்றவர்களே பாராட்டும் பதக்கமும் பதவி உயர்வும் பெறுவதைப் பார்க்கிறோம். ஆகவே இன்றிலிருந்து அல்லது இக்கணமே மறதிக்கு விடை கொடுப்போம். தகுந்த முறைகளைச் சரியாகக் கையாண்டு ஞாபக சக்தியை வளர்ப்போம். வாழ்க்கையின் வெற்றிப்படிகளை பெருமையாக மதிப்போம்.
- முனைவர் கே.விஸ்வநாதன், கோவை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT