பிறந்த நாளில் ட்ரெய்லர்
சமீப காலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சமீப காலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் உருவாகி வரும் படம் "எதிர் வினையாற்று'. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் புகைப்படக் கலைஞர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான்.
அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே திரைக்கதை.
"எதிர் வினையாற்று' படத்தின் கதாநாயகனாக அலெக்ஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சனம் ஷெட்டி நடிக்கிறார்.
ஆர்.கே.சுரேஷ், "ஆடுகளம்' நரேன், லட்சுமி பிரியா,சம்பத்ராம், அனுபமா குமார், பிளாக் மணி உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர். சனம் ஷெட்டியின் பிறந்த நாளான கடந்த 12 -ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த ட்ரெய்லருக்கு இணைய தளங்களில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.