முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மீனாவின் பதில்கள்

1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனா இன்ஸ்ட்டாகிராமில் தீவிரமாக இருக்கிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனா இன்ஸ்ட்டாகிராமில் தீவிரமாக இருக்கிறார். மீனாவை 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்ட்டாவில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ரசிகர்களுக்காக சமீபத்தில் கேள்வி -பதில் பகுதி நடத்தினார். இந்த பகுதியின் போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் மீனா.

ரசிகர்களிடம் இருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட கேள்விகளை பெற்றார். மீனா சில சிக்கலான கேள்விகளுக்கு கூட பொறுமை இழக்காமல், கோபப்படாமல் பக்குவமாக பதிலளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு பதில் அளித்த மீனா, கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் படத்தை பகிர்ந்து "கொஞ்சம் லேட்' என்று வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார். இது தவிர அவர் தனது நடிப்பில் வரவிருக்கும் படங்கள், திரைப்படத் துறை அனுபவம் மற்றும் அவரது மகள் நைனிகா பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தனது வயதை பற்றி கேள்வி எழுப்பிய ரசிகருக்கு "பெண்களின் வயதைக் கேட்பது நாகரிகமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா? '' என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement

மற்றொரு ரசிகர் "என்றைக்காவது சினிமாவுக்கு எதற்காக வந்தோம்னு வருத்தப்பட்டு இருக்கீங்களா?' என்று எழுப்பிய கேள்விக்கு "பல தடவை" என்று கண்ணில் கண்ணீர் வர சிரிக்கும் எமோஜியுடன் பதில் கூறி உள்ளார். மற்றொரு ரசிகர் நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியதற்கு, நல்ல ஆசை என்ற பொருள்படும்படி "ஆவ்' என்று குறிப்பிட்டுள்ளார் மீனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments