FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆண்ட்ரியாவின் அடுத்த பாடல்

வேலன் புரடக்ஷன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  த்ரில்லர் படம் "வெப்'. அறிமுக இயக்குநர் ஹாரூண்  இயக்குகிறார்.

1 பிப்ரவரி 2024, 2:26 pm IST
பகிர்:


வேலன் புரடக்ஷன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  த்ரில்லர் படம் "வெப்'. அறிமுக இயக்குநர் ஹாரூண்  இயக்குகிறார். நட்டி,  ஷில்பா மஞ்சுநாத் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். ஐ.டி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாசாரத்தை மையப்படுத்திய கதை.

சமீபத்தில் "புஷ்பா' படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த "ஓல்றியா மாமா..' பாடலை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா "வெப்' படத்துக்காக " சொவீக் டே ஃபுல்லா  வேலை செய்ய கழுத்துல டைய்.. வீக்கென்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை.. இரவு முடியும் வரை... நீ ஆடு..' எனும் பாடலை பாடியுள்ளார். பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments