ஞாயிறு கொண்டாட்டம்

வல்லவன் வகுத்ததடா!

போகஸ் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில்,விநாயக் துரை தயாரித்து இயக்கியுள்ள படம், "வல்லவன் வகுத்ததடா'.

DIN

போகஸ் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில்,விநாயக் துரை தயாரித்து இயக்கியுள்ள படம், "வல்லவன் வகுத்ததடா'. இதில், தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலசந்திரன், அனன்யாமணி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ், ஆர்.ஸ்வாதி மீனாட்சி உள்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ள விநாயக் துரை கூறியதாவது, "இப்படம் ஒரு க்ரைம் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது.. பணம் மட்டுமே  வாழ்க்கைன்னு நினைக்கக்கூடிய  5 விதமான மனிதர்கள். அந்த பணத்தால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சம்பவங்கள் அவர்களது வாழ்க்கை பாதையையே மாற்றிவிடுகிறது.இதை ஒரு ஹைப்பர் லிங்க் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.தேஜ் சரண்ராஜ் அன்றாட பிழைப்புக்கு ஏதாவது ஒருதொழிலை செய்து அதாவது திருடியோ, ஏமாற்றியோ அன்றைய நாளை கழித்து விட்டால் போதும் என நினைப்பவர். அடுத்து விக்ரம் ஆதித்யா, வட்டி தொழில் செய்து பிழைப்பை நடத்துபவர். அநியாய வட்டி என்றாலும் அவரை பொருத்த வரை அது அவரின் நேர்மையான தொழில் என கருதக்கூடியவர்.

அவரிடம் வட்டிக்கு வாங்கிவிட்டு ஏமாற்ற நினைத்தால் அந்த பணத்தை அவரிடம் இருந்து வாங்க என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். மூன்றாவதாக விரைவில் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும், அனன்யா மணி, வாழ்க்கையில் என்ன சூழல் வந்தாலும், தனக்கு உண்டான ஒரு வாழ்க்கையை மிகவும் அழகாக அமைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்.அடுத்து சுவாதி கிருஷ்ணன். கால் டாக்சி பெண் டிரைவர்  வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்க கூடிய ஒரு பெண். இப்படி வித விதமான மனிதர்களின் கதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT