முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கூர்மன்

எம். கே. எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கூர்மன்'. ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்,  நரேன், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

எம். கே. எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கூர்மன்'. ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்,  நரேன், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரையன் பி. ஜார்ஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "" கூர்மன் என்ற தமிழ்ச் சொல் இப்போது வரைக்கும் இல்லை. கூர்மையானவன் என்பதைச் சுருக்கியே கூர்மன் என்று வைத்துள்ளோம். கூர்மன் என்ற சொல்லை இதற்காக கண்டுபிடித்துள்ளோம்.

இந்தப் படத்தின் கதை வித்தியாசமானது. ஒருவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படும் கதை. உலகம் முழுக்க மனிதர்களில் வித்தியாசமான குணாதிசயம் படைத்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அதில் மைண்ட் ரீடர் எனப்படும் ஒரு வகை உண்டு. அதாவது ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை  அவர் அறிந்து சொல்லி விடுவார். இது சம்பந்தப்பட்ட சில மனிதர்களை நான் சந்தித்தேன். அவர்களை பின் தொடர்ந்தேன்.

அப்போதுதான் சினிமாவுக்கான ஆரம்பப் புள்ளி கிடைத்தது.  மனித மூளை என்பது ஆக்கம், அழித்தல் என எல்லாவற்றுக்கும் பயன்படும். இதை ஆக்கத்துக்கான சினிமாவாக எடுத்து வர நினைத்தேன். குற்றவாளிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிந்து சொல்லும் ஒரு மைண்ட் ரீடரின் கதை இது. நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தை தங்களுக்கு கொடுக்கும்'' 
என்றார் இயக்குநர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.