ஞாயிறு கொண்டாட்டம்

வரவேற்பைப் பெற்ற குறும்படம்

பூமியின் உயிரின இயக்கங்களுக்கு நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் அடிப்படையாக உள்ளன. அதேபோல் காதலுக்கும்,

DIN


பூமியின் உயிரின இயக்கங்களுக்கு நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் அடிப்படையாக உள்ளன. அதேபோல் காதலுக்கும், காதல் வெற்றி அடையவும் இவை  மூல காரணமாகவும் அடிப்படையாகவும் உள்ளன  என்பதுடன் இந்தப் பஞ்சபூத சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் காதலில் வெற்றி பெறலாம் என்கிற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படம் "முதல் நீ முடிவும் நீ இப்படத்தை உதய பிரகாஷ் தயாரித்து,  இயக்கியிருக்கிறார்.  

காதல் வெற்றியடைய  பஞ்சபூதங்கள் எப்படி இயங்குகின்றன என்று குறும்படத்தில் சொல்லியிருக்கிறார். கருத்திலும் கதையமைப்பிலும் ஒரு பெரும் படத்திற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது இக்குறும்படம். அருண் பிரசாந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  இதன் படப்பிடிப்பு மதுரையில் பத்து நாட்கள் நடைபெற்றுள்ளது. ஒரு திரைப்படத்திற்கான மெனக்கெடல்களுடன் உருவாகியுள்ளது.

"இறைவியே துணைவியே' என்றொரு பாடலும் இதில் உண்டு. இந்தப் பாடலை ஹரிஷ்மா மனோ வசந்த் ராஜா எழுதியுள்ளார். அஸ்வின் ஜான்சன்,  ஜெமிமா ரூபாவதி பாடியுள்ளனர். இந்தப் பாடல்  இசை சார்ந்த பல்வேறு  இணையதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT