முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வரவேற்பைப் பெற்ற தனிப் பாடல்

இசையும், பாட்டும் இல்லாவிட்டால் திசைகள் கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை கண்டுபிடித்தவன் மகத்தானவன். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:


இசையும், பாட்டும் இல்லாவிட்டால் திசைகள் கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை கண்டுபிடித்தவன் மகத்தானவன். 

தமிழில் இறைவனைப் பாடும் தேவாரப்பாடல்கள் தொடங்கி, திரையில் பாடும் பாடல்கள் வரை எத்தனையோ வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் ஒரு படத்தில் 20 க்கும் மேற்பட்ட பாடல்கள் எல்லாம் கூட இடம் பெற்றன. தற்போது ஒன்றிரண்டு பாடல்கள் என சுருங்கி விட்டது. படத்தில் பாடல்கள் சுருங்கி விட்டாலும் தனியிசை ஆல்பங்கள் தற்போது கணிசமாக வரத் துவங்கிவிட்டன. அதில் நல்ல பாடல்கள் மட்டும் சிறப்பான வரவேற்பைப் பெறுகின்றன. அப்படியொரு வரவேற்பை பெறவே தற்போது வட்டல் ஸ்டியோஸ் தயாரிப்பில் தனியிசைப் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. "நகராதே...' என்ற வரியில் துவங்கும் இப்பாடலை அஷ்வின் ராஜ் தனது இசையில் உருவாக்கியிருக்கிறார். கு.கார்த்திக் எழுதியுள்ளார்.  வசீகர குராலால் நிவாஸ் கே பிரசன்னாவும், ஸ்வாகதா எஸ் கிருஷ்ணனும் பாடியுள்ளனர். நாஷ் இயக்கியுள்ளார். 

வி. ஜே. மாதேவன்,  பாடலைப்பாடியுள்ள ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன் நடிக்கின்றனர்.   ஷாரஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்பாடல் வெறும் காட்சிப்பாடலாக மட்டுமில்லாமல் கதைப்பாடலாகவும் விரிகிறது. இந்தப் பாடலுக்குள் கவிதை போன்ற அழகான கதையொன்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.