முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மனிதாபிமானம்

ஈரானிய சினிமாவின் ஆங்கிலத் தலைப்பு - டுடே""என்னை ஹைகோர்ட் வளாகத்தில் விட்டு விடுகிறீர்களா?'' என்று கேட்டார் அந்த மனிதர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

ஈரானிய சினிமாவின் ஆங்கிலத் தலைப்பு - டுடே""என்னை ஹைகோர்ட் வளாகத்தில் விட்டு விடுகிறீர்களா?'' என்று கேட்டார் அந்த மனிதர்.
""வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள்'' என்றார் டாக்ஸி டிரைவர்.
வண்டி இலக்கை அடைந்தது. பயணித்த நபர், பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கிக்
கொண்டார். முதல் சவாரியிலேயே நல்ல சவாரியாக அமைந்தது யூனூஸூக்கும் திருப்திதான்! பின்னர், மிகவும் சோர்வுடன் தெரிந்த பெண்மணி ஒருவர், டாக்ஸியை நெருங்கினார்.
""என்னை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறீர்களா?'' என்று தளர்ந்த குரலில் பெண் கேட்டார். அவரைப் பார்த்ததுமே யூனூஸின் மனதில்
பரிதாபம் ஏற்பட்டது.
"'எனக்குத் தெரிந்த ஒருவர் மருத்துவமனையில் வேலை செய்கிறார்'' என்றாள்.
தான் கர்ப்பிணி என்றும், பேறுகாலம் நெருங்கிவிட்டது என்றும் அந்தப் பெண்மணி மெல்லிய குரலில் சொன்னாள். அவளுக்கு 40 வயது இருக்கும்.
மருத்துவமனை வளாகத்தை எட்டி உள்ளே சென்றனர். அந்தப் பெண்மணி வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம், தன் பெயர் சதக் என்று சொன்னாள். மருத்துவமனை நுழைவு விண்ணப்பத்தில் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. மருத்துவமனையில் பணிபுரிந்த, சதக்குக்குத் தெரிந்தவர் எப்போதோ பணி ஓய்வு பெற்றுவிட்டார் என்று சொன்னபோது, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. டாக்ஸி பயணக் கட்டணத்தையும் மருத்துவமனை நுழைவுக் கட்டணத்தையும் அந்த மனிதர் தனக்காக அளிப்பார் என்று நினைத்தார் அந்தப் பேதை.
டாக்ஸி டிரைவர் யூனூஸ் பெருந்தன்மையோடு செயல்பட்டார்.
""பயணக் கட்டணம் பற்றிக் கவலைப்பட வேண்டாம். மருத்துவமனைக் கட்டணத்தையும் நானே செலுத்துகிறேன்'' என்று பணம் செலுத்தும் மையத்தில் பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு, ஒரு பெருமூச்சுவிட்டார்.
திடீரென்று அந்தப் பெண்மணி சரிந்தார். ஸ்ட்ரெக்ச்சரில் தூக்கிக் கொண்டு போனார்கள். கொஞ்ச நேரம் கழித்து, தலைமை நர்ஸ் வந்து, ""உதிரப் போக்கு இருக்கிறது.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். நீங்கள் சம்மதம் தெரிவித்து, ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும்'' என்றார்.
அறுவைச் சிகிச்சை முடிந்தது. வார்டில் இருக்கும் சதக் அம்மாவை யூனூஸ் பார்க்கச் சென்றார்.
""நான் தாய் இல்லாததால் கஷ்டப்பட்டதைப் போல என் குழந்தை கஷ்டப்படக் கூடாது. என் குழந்தையைக் கவனித்துக் கொள்வீர்களா?''
யூனூஸ் வாக்களித்தார்
சிறிது நேரத்தில் சதக் மரித்தாள். யூனூஸின் மனதில் தூக்கம் மேலோங்கியது. புதிதாகப் பிறந்த புத்தம் புது ரோஜாவைப் போல் மணக்கும் அந்தக் குழந்தைக்கும் பொறுப்பேற்று, தனது இல்லத்துக்கு எடுத்துச் சென்றார் யூனூஸ்.
இயக்குநர்- ரெசா மிர்காரிமி வெளியான ஆண்டு-2014 ஓடும் நேரம்- 88 நிமிடங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.