கின்னஸ் சாதனை புரிந்த இந்திய மோதிரம்..!
ஒரு மோதிரத்தில் 24,679 வைரங்களைப் பதித்து, ரோஜா இதழ்களைப் போல கேரளத்தைச் சேர்ந்த "எஸ்.டபிள்யூ.ஏ.' என்ற நகை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஒரு மோதிரத்தில் 24,679 வைரங்களைப் பதித்து, ரோஜா இதழ்களைப் போல கேரளத்தைச் சேர்ந்த "எஸ்.டபிள்யூ.ஏ.' என்ற நகை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மோதிரத்தை அணிந்தால், மோதிர விரலுக்கு அருகே இருக்கும் இதர மூன்று விரல்களும் மோதிரம் அணிந்தவாறு இருக்கும். 340 கிராம் எடையுள்ள மோதிரத்தின் விலை ரூ.75 லட்சமாகும். மூன்று மாதங்கள் ஆனது இந்த மோதிரத்தைத் தயாரிக்கவே!
இந்த மோதிரம் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. மோதிரம் மே மாதம் தயாரிக்கப்பட்டாலும், அண்மையில்தான் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த மோதிரத்துக்கு "அமி' என்று பெயரிட்டுள்ளனர். இதற்கு "அழியாதது' என்று பொருள். 12,638 வைரங்களைப் பொருத்தியதுதான் இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.