உயர்ந்த பண்பு!
ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்கு பெரியார் ஈ.வே.ரா.வை அழைத்திருந்திருந்தார். காலையிலேயே பெரியார் ஈ.வெ.ரா. வருவதாக இருந்தது.
ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்கு பெரியார் ஈ.வே.ரா.வை அழைத்திருந்திருந்தார். காலையிலேயே பெரியார் ஈ.வெ.ரா. வருவதாக இருந்தது. ஆனாலும் அவர் வரவில்லை. இதனால் கல்கிக்கு வருத்தமாகப் போய்விட்டது.
ஆனால் திடீரென்று மாலையில் பெரியார் திருமண வீட்டுக்கு வந்திருந்தார். கல்கிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இதுகுறித்து கல்கி கேட்டபோது, "" நான் கருப்புச் சட்டை அணிவேன். உங்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்போது, உங்கள் உறவினர்களுக்கு அது அபசகுனமாகவேத் தோன்றும். அதனால்தான் காலையில் வராமல் இப்போது வந்தேன்'' என்றார் பெரியார் ஈ.வே.ரா.
பெரியாரின் உயர்ந்த பண்பைக் கேட்டு அங்கிருந்தோர் வியந்தனர்.
Advertisement