கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களின் உள்ளே என்ன இருக்கும் என்பதில், விஞ்ஞானமும் இருக்கிறது. இடிதாங்கும் தன்மை இந்தக் கலசத்துக்கு இருக்கிறது.
இப்போது உயர்ந்தக் கட்டடங்களில் கூட காந்தக் கம்பிகள் பொருத்தப்படுகின்றன. வானில் இருந்து மழை பெய்யும்போது, இடி தாக்கினாலோ, மின்னல் பாய்ந்தாலோ முதலில் உயர்ந்தக் கட்டடங்களைத் தான் தாக்கும். அந்தக் காலத்தில் கோயில் கோபுரங்கள்தான் உயர்ந்து நிற்கும். இவற்றுக்கு இடி தாக்காமல் இருக்கவே, அவற்றின் உச்சியில் செம்புக் கலசம் பொருத்தப்பட்டன.
காந்தக் கம்பிகள் விஞ்ஞானத்தால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் செம்புக் கலசங்கள் பொருத்தப்பட்டன. இவற்றில் வரகு தானியம் கொட்டப்பட்டிருக்கும். இந்தத் தானியம் இருக்கும் வரையில் இடியை எதிர்க்கும் காந்த அதிர்வு கிடைக்கும். மொத்தத்தில், இது இடிதாங்கி. வரகு தானியத்துக்கு இடியை எதிர்க்கும்- தடுக்கும் ஆற்றல் 12 ஆண்டுகள் வரை உண்டு. எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.