ஞாயிறு கொண்டாட்டம்

ஹாலிவுட் கதையில் ஜெய் ஆகாஷ்

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெய் ஆகாஷ் நடித்து இயக்கி வரும் படம்  "ஜெய் விஜயம்'.

தினமணி


ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெய் ஆகாஷ் நடித்து இயக்கி வரும் படம்  "ஜெய் விஜயம்'. ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் அக்ஷயா கண்டமுத்தன் இதில் நாயகியாக நடிக்கிறார். மைக்கேல் அகஸ்டின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜெய் ஆகாஷ் பேசும் போது.... "" ஜெய் விஜயம்  என்றால் வெற்றி. இதற்கு முன்பு "அமைச்சர் ரிட்டர்ன்' என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படம் எடுத்தேன்.  எவ்வளவு செலவு செய்தாலும் கதைதான் மிக முக்கியம். இதற்கு  முன்பு நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அதில்  நிறைய தெரிந்த முகங்கள் நடித்திருக்கிறார்கள். 

ஆனால் அந்தப் படங்கள் மக்களிடம் போய் சேரவில்லை. எனவே நல்ல  கதைகள் தேர்வு செய்யச் சொன்னார்கள். ஆனால் நல்ல கதை கிடைக்கவில்லை. எதுவுமே வித்தியாசமாக இல்லை. சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா என்றால் பைத்தியம்.  தமிழில் எல்லா படத்தையும்  நான் பார்த்து விடுவேன்.  எந்த படத்தை கேட்டாலும் யார் ஹீரோ என்று சொல்லி விடுவேன்.  தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என பிற மொழி படங்களையும் பார்த்து விடுவேன். ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து இந்த கதையை எடுத்தேன். அதற்காக  நிறைய விலை கொடுத்து விட்டேன். அது என்ன  கதை என்பதை இப்போது சொல்ல மாட்டேன். படம் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மலையாள படம் எப்படி எடுப்பார்களோ அப்படி எடுத்திருக்கிறேன். கதைக்கு அடுத்தபடியாக அதிகம் செலவழித்தது இதில் வரும் ஒரு  ஆத்மா காட்சிக்குதான். இந்த ஆத்மாவை ஒரு புகை வடிவில் காட்டியிருக்கிறோம். அந்த புகை குழந்தையை காப்பாற்ற ஹீரோவுக்கு வழிகாட்டும். 

இதில் இன்னொரு பெரிய சஸ்பென்ஸ் இருக்கிறது படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்.  இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதன் பிறகு ஏ கியூப் என்ற ஆப்பில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதில் பார்க்க 50 ரூபாய் மட்டும்தான். உலகத்தில் எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் இந்த படத்தை டவுன் லோட் செய்து பார்க்கலாம். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். சஸ்பென்ஸ், த்ரில்லர் பாணி கதையாக இது இருக்கும்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

SCROLL FOR NEXT