உயிர்த் துளி
"காமராசு', "அய்யா வழி', "நதிகள் நனைவதில்லை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். சிறிய இடைவெளிக்குப் பின் இப்போது இயக்கி வரும் படம் "உயிர்த் துளி'.
"காமராசு', "அய்யா வழி', "நதிகள் நனைவதில்லை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். சிறிய இடைவெளிக்குப் பின் இப்போது இயக்கி வரும் படம் "உயிர்த் துளி'. நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திர சேகர், வாகை சந்திரசேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், ரவிமரியா, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதாநாயகி இல்லாமல் கதையே நாயகனாக கொண்ட திரைக்கதையாக இது உருவாகி வருகிறது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது....
""இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை. . எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், கண் கூடாக பார்த்த அம்சங்கள்...இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான். "ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம்.' வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா என்பது டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை.
நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம். எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. அதற்கான விழிப்புணர்வு இது'' என்றார்.
Advertisement