எங்கும்... எப்போதும்..!
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட "லைட் காம்பவுன்ட் ஹெலிகாப்டர்' (எல்.சி. ஹெச்.) .
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட "லைட் காம்பவுன்ட் ஹெலிகாப்டர்' (எல்.சி. ஹெச்.) . ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 ஹெலிகாப்டர்கள் விமானப்படையிடம் சேர்க்கப்பட்டன. ஒப்படைக்கப்பட்ட நாளன்று, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே விமானியாகப் பயணித்து, சிறப்பைச் சேர்த்தார்.
இந்த ஹெலிகாப்டர்களை பெங்களூரிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் உருவாக்கியது.
இதன் சிறப்பம்சங்கள்:
தாக்குத் திறன் பெற்ற ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்கள்.
எதிரிகளின் ராடார் வளையத்தில் சிக்காமல் பறக்கும் ஸ்டைல் அமைப்பு.
இரட்டை இருக்கைகள், ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள். ஏவுகணைகளையும், விமானங்களையும் தாக்கி அழிக்கும் எம்.பி.டி.ஏ. ஏவுகணை, ராக்கெட்டுகள், இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற உபகரணங்களை கொண்டது.
உயரமான பகுதிகளில் மிக அதிக நேரம் பறக்க இயலும்.
கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் லேண்ட் செய்யும். அங்கிருந்தே எடைகளுடன் பறந்து உயரும் திறனும் கொண்டது.
சீனாவுடன் மோதல் நிகழும் கிழக்குப் பகுதிகளில் பயன்படுத்த ஏற்றது.
இரவிலும், மோசமான காலநிலையிலும் தாக்குதல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படலாம்.