கட்ட வண்டி 
ஞாயிறு கொண்டாட்டம்

கட்ட வண்டி... கட்ட வண்டி...

உழவுத் தொழிலுக்கும், கிராம மக்களின் போக்குவரத்துக்கும் பெருமளவில் பங்கு வகித்த கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து விடைபெற்று வருகின்றன.

பெரியார் மன்னன்

உழவுத் தொழிலுக்கும், கிராம மக்களின் போக்குவரத்துக்கும் பெருமளவில் பங்கு வகித்த கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து விடைபெற்று வருகின்றன. இதனால், இளையதலைமுறையினர் காண்பதற்கே அரிதாகிவிட்டது. இன்றும் கட்டை மாட்டு வண்டியை பயன்படுத்தி வரும் சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி உமையாள்புரத்தைச் சேர்ந்த வீராசாமியிடம் பேசியபோது:

""அனைத்துத் துறையிலும் நவீன கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. நிலத்தை உழுதல், தண்ணீர் இரைத்தல், பயிர் நடவு செய்தல், களையெடுத்தல், கதிர் அறுவடை செய்தல், விளைபொருள்களை ஏற்றிச் செல்லுதல், கதிரடித்து துôற்றி தானியங்களைப் பிரித்தெடுத்தல், வைக்கோல் சுற்றுதல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பணிகளுக்கும், விதவிதமாக கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

இதனால், காளைகளையும், கட்டை மாட்டு வண்டிகளையும் வேளாண் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து போனது.

எனது கிராமத்தில் இருந்து தினம்தோறும் ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம் பகுதிக்கு, காளைகள் பூட்டிய கட்டை வண்டியில் விளைபொருள்களை ஏற்றிச் சென்று வருகிறேன்.

தற்போது கட்டை மாட்டு வண்டிகளை பழுது பார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் கைதேர்ந்த தச்சர்கள் இல்லை.

இதனால் பராமரிப்பதற்கும் தொடர்ந்து பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

விவசாயிகளின் தோழனான கட்டை மாட்டு வண்டிகளின் பயன்பாடு, வாகனங்கள் பரிணாம வளர்ச்சியில் இவற்றின் பங்கு குறித்து, குழந்தைகள் அறிந்து கொள்வதற்காகவாவது, கட்டை மாட்டு வண்டியை பயன்பாட்டில் இருந்து விடை பெறாமல் தொடர்ந்து பராமரித்து பாதுகாத்து பயன்படுத்தி வருகிறேன்'' என்கிறார் வீராசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

திருக்கழுக்குன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

ஒன்றியக்குழு உறுப்பினா் தா்னா போராட்டம்

வடமாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் மோதிரம், ரூ.3,000 பணம் திருட்டு

SCROLL FOR NEXT