ஞாயிறு கொண்டாட்டம்

அமேசானில் ஹாட் ஸ்பாட்

அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் ஹாட் ஸ்பாட் திரைப்படம் வெளியீடு

DIN

சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த 'ஹாட் ஸ்பாட்' திரைப்படம் வரும் அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியுள்ளது. கே. ஜே. பி. டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே. பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த மார்ச் 29 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், மற்றும் கெளரி கிஷன், சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன்- வான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியான நொடியிலேயே பெரும் விமர்சனங்களைக் குவித்தது.

படம் வெளியான பிறகு படத்தின் நெகட்டிவிடி மொத்தமும் பாஸிடிவிடியாக மாறியது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினார்கள். சமூகம் பேசத் தயங்கும் பல விசயங்களை, மிகத் தைரியமாக, மிகத் தெளிவாக கையாண்ட விதத்தில், இப்படம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது.

திரையரங்க வெளியீட்டை அடுத்து இப்படம் இப்போது ஓ.டி.டி.யில் வெளிவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT