ஹிந்தி படஉலகின் முடிசூடா மன்னரான அமிதாபச்சன், வயதாகிவிட்டாலும் திரையுலகிலும் விளம்பர உலகிலும் அவருக்கு ஈடு இணையில்லை. அவரிடம் உள்ள உடமைகளே அவருடைய ஆடம்பரமான வாழ்க்கையையும் வெற்றிகளையும் குறிக்கின்றன. அவற்றில் சில:
ஜல்சா
அமிதாப்புக்கு மும்பையில் மொத்தம் ஐந்து வீடுகள் உள்ளன. ஜல்சா வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய். இந்த வீட்டில்தான் அமிதாப், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் வசிக்கின்றனர்.
இந்த பிரமிக்க வைக்கும் ஆடம்பர மாளிகையுடன் தோட்டங்களும் உண்டு. "சாட் பே சட்டா' என்ற படத்தில் நடித்ததற்காக இயக்குநர் ரமேஷ் சிப்பி அன்பளிப்பாக வழங்கினார்.
ஜூகு பீச் அருகே அமிதாப், தனது தந்தையுடன் வசித்த ஆரம்ப கால வீடு பிரதிக்க்ஷா உள்ளது. இது ஜல்சாவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மெர்சிடீஸ் கார்
ஆடம்பரமான மெர்சிடீஸ் கார் உள்ளது. இந்த கார் இருப்பதே அந்தஸ்து, வசதியின் சின்னம்.
ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்கள் மீது அமிதாப்புக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. அல்ட்ரா பீரிமியம் வாகனம்.ஆடம்பரமான வாழ்க்கைக்கும் ஒப்பிட முடியாத நேர்த்திக்கும், வசதிகளுக்கும் பேர் பெற்றது.
விண்டேஜ் கார் சேகரிப்பு
இவரிடம் மெர்சிடீஸ் பென்ஸ் 600, போர்சி, செவர்லட் இம்பாலா உள்பட பழங்கால கார்களின் சேகரிப்பு உள்ளது. அவருடைய கேரேஜில் இவை மதிப்புமிக்க உடமைகள்.
திரைப்பட நினைவுச் சின்னங்கள்
இவர் நடிகராக தான் திரைப்படங்களில் பயன்படுத்திய உடைகள், படத்தின் வசனத் தொகுப்புகள், விருதுகள் உள்பட நினைவுச் சின்னங்களின் தொகுப்பை வைத்துள்ளார். இந்த கலைப் பொருள்கள் உணர்வுப் பூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளன. திரைப்பட துறையில் அவரது புகழ் பெற்ற வாழ்க்கையையும் எடுத்து காட்டுகின்றன.
தனிப்பட்ட கலை சேகரிப்பு
இவர் இந்தியக் கலைஞர்களின் உன்னத படைப்புகளைச் சேகரித்து வைத்துள்ளார். இவை அவருடைய வீட்டில் அழகான வடிவமைப்புடன் மிக அழகாக சேகரித்து வைக்கப் பட்டுள்ளன.
ஆடம்பர கடிகாரங்கள்
இவரிடம் ரோலக்ஸ், படேக்பிலிப் போன்ற பிராண்டுகளின் உயர்தர கடிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு கடிகாரமும் வெறும் டைம் பீஸ் மட்டுமல்ல ஸ்டைலின் பிரதிபலிப்பு.
ரியல் எஸ்டேட் முதலீடுகள்
பச்சன் நாடு முழுவதும் ரியல் எஸ்டேட்டிலும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளார். இந்த முதலீடுகள் அவருடைய வணிகத் திறமையை பறைசாற்றுகின்றன. இந்த முதலீடுகள் அவருடைய சொத்து மதிப்பை உயர்த்துவதில் பெறும் பங்கு வகிங்கின்றன.
பெரிய நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தங்கள் மாகி, நூடுல்ஸ், பார்கர் பேனா, டிவிஎஸ் ஜுபிடர் ,டாட்டா ஸ்கை போன்ற பல பெரிய நிறுவனங்களின் விளம்பரத் தூதுவராக அமிதாப் உள்ளார். இதுவும் அவருடைய சொத்து மதிப்பை உயர்த்துவதில் பெறும் பங்கு வகிப்பதோடு, சினிமா உலகில் அவருடைய செல்வாக்கையும் நிரூபிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.