ஞாயிறு கொண்டாட்டம்

ஊரும் பேரும்...!

ஊர்களுக்குப் பெயர்கள் உண்டு. பெயர்கள் வைப்பதற்கும் காரணமும் உண்டு. இந்த நிலையில், வித்தியாசமான பெயர்களில் அமைந்த ஊர்கள் பல உள்ளன.

DIN

ஊர்களுக்குப் பெயர்கள் உண்டு. பெயர்கள் வைப்பதற்கும் காரணமும் உண்டு. இந்த நிலையில், வித்தியாசமான பெயர்களில் அமைந்த ஊர்கள் பல உள்ளன. இவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒர் ஊரின் பெயர்- "ஓடைப்பட்டி'.

திருநெல்வேலி மாவட்டத்தில்.. :- "ஓடைமறிச்சான்', "வயல்கரை',

கன்னியாகுமரி மாவட்டத்தில்...: "புலியிறங்கி', "பட்டர்விளை',

-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

திருநெல்வேலி மாவட்டத்தில்... : "காக்காச்சி', " நாலுமுக்கு', "ஊத்து', " குதிரைவெட்டி', "மேல்புறம்',

கன்னியாகுமரி மாவட்டத்தில்...: "இடிச்சகுளம்',. "திடல்', "ஊட்டுவாழ்மடம்',

சிவகங்கை மாவட்டத்தில்.. : "மாடு மறிச்சான்',

-ஜே..எல்.புனிதவதி, கோவை-17.

கன்னியாகுமரி மாவட்டத்தில்... : "அஞ்சுகண்ணு கலுங்கு',

ராமேசுவரம் அருகேயுள்ள சில ஊர்களின் பெயர்: "தங்கச்சிமடம்', "அக்காமடம்'.

ஹைதராபாத் என்ற பெயரில் பாகிஸ்தானிலும், அலகாபாத் என்ற பெயரில் ஈரானிலும் பாகிஸ்தானிலும், தில்லி என்ற பெயரில் இந்தோனேஷியாவிலும் நகரங்கள்உள்ளன.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருண்ணன்புதூர்.

காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே "வம்பன்' என்ற பெயரில் ஒரு கிராமம் உள்ளது.

-ந.சண்முகம், திருவண்ணாமலை.

தென்காசியில் "குடியிருப்பு' என்ற பெயரில் ஒரு கிராமம் உண்டு.

- வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள், பொதுமக்கள் மோதல்! அம்பத்தூரில் பரபரப்பு!

பிகாா் தோ்தல் வெற்றி போலி மதச்சாா்பின்மைக்கு பாடம்: இந்திய குடியரசு கட்சி

எம்சிடி வாா்டுகள் இடைத்தோ்தல் பிரசாரத்தில் தில்லி பாஜக மும்முரம்!

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

SCROLL FOR NEXT