ஞாயிறு கொண்டாட்டம்

புலம்பெயர் தமிழர்கள்...

ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க வைப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார்கள்.

தினமணி செய்திச் சேவை

ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க வைப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள்; உண்மையான திகில் மனித இயல்பில் இருளில்தான் இருக்கிறது என்பதை கண்டு

பிடிக்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாக நடிக்கிறார். மால்டாவை சார்ந்த டேன் ஹாலண்ட் கதாநாயகனாக நடிக்கிறார். இலங்கையைச் சேர்ந்த துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா, தேவ அலோசியஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த நீரோ கில்பர்ட் எழுதி இயக்குகிறார்.

ஒளிப்பதிவு இயக்குநராக சிவசாந்தகுமாரும் படத்தொகுப்பாளராக சுஜித் ஜெயக்குமாரும் பணியாற்றுகிறார்கள். இம் மூவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள். இயக்குநர் பேசும் போது... 'பொதுவாக அனைத்துப் பேய்க்கதைகளிலும் தொன்மத்தின் சாயல் படிந்திருக்கும். நாட்டுப்புறக் கதைகளின் சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும்.

இவற்றைத் தர்க்க ஒழுங்கில் அணுகக்கூடாது. லாஜிக் பார்க்கக்கூடாது. அவை தரும் திகில் உணர்ச்சிதான் நமக்கு முக்கியம். இந்தத் திகில் உணர்ச்சியே ஒரு கட்டத்தில் காமெடியாகி விடும். 'இதற்கா இத்தனை பயந்தோம்?' என்று விடிந்த பிறகும் சிரித்துக் கொண்டேயிருப்போம். லாஜிக்கை சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இதிலுள்ள அபாரமான நகைச்சுவையை ரசிக்க முடியும். இது வித்தியாசமான பேய்ப் படமாக இருக்கும். நல்லதொரு அனுபவமாக இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

தமிழ்க் கலை விழா போட்டி: சிவகாசி கல்லூரி முதலிடம்

தினமணி செய்தி எதிரொலி: கொடைக்கானலில் விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவு

அமெரிக்காவின் 50 சதவீத வரியால் கடும் பின்னடைவை சந்திக்கும் தோல் தொழில்

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT