ஞாயிறு கொண்டாட்டம்

பன் பட்டர் ஜாம்

பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள 'பன் பட்டர் ஜாம்' படம் வரும் 18 -ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திச் சேவை

பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள 'பன் பட்டர் ஜாம்' படம் வரும் 18 -ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ராஜு, '' எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும், அதில் என்னை ஜெயிக்க வைத்த மக்களும் தான் காரணம். ஆரம்பத்தில் இருந்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.

இந்தப் படவாய்ப்பு என்னைத் தேடி வர இதில் வேலை பார்த்த உதவி இயக்குநர்கள்தான் காரணம். நானும் ஒரு உதவி இயக்குநர் என்பதால் அவர்களை கெளரவிக்க நினைக்கிறேன். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நானே எழுதி இயக்கி நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன்.

அது தாமதமான நேரத்தில் இந்தப் படவாய்ப்பு கிடைத்தது. இதற்கு அனுமதித்த ஜியோ ஹாட்ஸ்டார் தள நிர்வாகத்துக்கு நன்றி. நிவாஸ் புரோ (இசையமைப்பாளர்) இசைத்த பாடல்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். ஆனால் அவர் செய்ததிலேயே சிறந்த ஆர்.ஆர் வேலை இதுதான். இயக்குநர் ராகவ் மிர்தாத். மிர்தாத் என்பது ஒரு தத்துவவியலாளரின் பெயர். ஜென் ஜி மக்களுக்கு ஒரு ஆழமான விஷயத்தை எப்படி சொல்வது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது.

இந்த வாய்ப்புக்காக அவருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எல்லோரும் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஆனால் இது தயாரிப்பாளருடைய கதை என்பதால் எல்லாம் சுலபமாக நடந்து விட்டது. என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் பணத்தை திருப்பி எடுத்து விட்டால்தான் என்னை நான் ஹீரோ என்று ஒப்புக் கொள்வேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT