ஞாயிறு கொண்டாட்டம்

ஏன் என்ற கேள்வி ?

ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை' என்ற திரைப்பாடலை நினைவுப்படுத்தும் நூல்தான் ஏன் என்ற கேள்வி?'.

பிஸ்மி பரிணாமன்

ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை' என்ற திரைப்பாடலை நினைவுப்படுத்தும் நூல்தான் ஏன் என்ற கேள்வி?'.

போதை மருந்துகள், விதம் விதமான வலைதளப் பணம் பிடுங்கல்கள்...' என்று பெருகிவிட்ட நிலையில் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் ஒரு நாளைக் கடப்பது எவ்வளவு கடினம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்ன செய்கிறோம், எதைச் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம்.. என்பது குறித்து உள்ளுக்குள் கேள்வி எழுப்புபவர்கள் வாழ்க்கையில் சுலபமாக வெற்றி அடைவார்கள் என்பதை அழுத்தமாக உணர்த்தும் நூல்தான் ஏன் என்ற கேள்வி ?' .

ஹெர் ஸ்டோரிஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த நூல் குறித்து வாழ்க்கைக் கல்வி பயிற்சியாளரும் பெண்ணிய எழுத்தாளருமான யாமினி கூறியது:

என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரியும். அவ்வளவுதான் அதற்கு மேல் எதுவும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் ஆர்வம் இருக்காது. செய்வதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதும் தெரியும். அதை சிறப்பாக செய்து வாழ்வில் வெற்றி பெற பலரும் முயற்சிப்பதில்லை.

அதையெல்லாம் தாண்டி ஏன் அதைச் செய்ய வேண்டும் என்பதும் தெரிந்தால் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியும். ஏன்... எதற்கு' என்று தெரிந்து செய்வதற்கும், தெரியாமல் ஏதாவது செய்து வைப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. செய்தலின் மூலம் கற்கவும் செய்வோம்.

தெரியாததை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வதும், தெரிந்ததை ஏன் செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்வதுமே நம் அறிவை விரிவாக்கி வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்கும். தெரியாது' என்று ஒப்புக் கொள்ள எந்தத் தயக்கமும் வேண்டாம்.

ஒரு விஷயம் நமக்குத் தெரியாமலேயே இருந்து விடுவதைவிட நாம் அதை கற்றுக்கொள்ள முயல்வது தான் நமது வெற்றியின் முதல் படி. பெண் குழந்தைககளுக்கு பிங்க்' நிறம் தான் பிடிக்கும். ஆண் குழந்தைககளுக்கு நீலம், சிவப்பு என்ற நிறங்கள்தான் பிடிக்கும்' என்று சொல்லப்படுகிறது. நம்பப்படுகிறது.

ஏன் பெண் குழந்தைகளுக்கு பிங்க் நிறம் பிடிக்கிறது? ஆண் குழந்தைகள் ஏன் பிங்கை விரும்புவதில்லை' என்று எப்போதாவது கேள்வி கேட்டிருப்போமா? வளர்ந்த பெண்கள் பிங்கை மட்டுமே விரும்புவதில்லையே . ஏன் பெண் குழந்தைகளுக்கு தனியாக, ஆண் குழந்தைகள் தனியாக பரிசு பொருள்கள் இருக்க வேண்டும்? ஏன் பெண் குழந்தைக்கு மருத்துவர் செட், பார்பி டால், சமையல் செட் என குறிப்பிட்ட பரிசு பொருள்கள் ? ஏன் எல்லா பார்பி பொம்மைகளும் ஒன்று போல கச்சிதமான உடலுடன் உள்ளன? ஏன் தென்னகப் பெண் குழந்தைகளுக்கான உடைகள் விளையாட வசதியாக இல்லை? பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஏன் விளையாட கூடாது என்று சொல்கிறார்கள் ?

ஏன் பெண்கள் வீட்டுப் பொறுப்பையும் தன்னுடைய வேலையையும் சேர்ந்தே பார்க்க வேண்டும்? கர்ப்பக் காலத்தில்தான் பார்த்துகொண்டிருக்கும் பணியை ஏன் விட வேண்டும்? பெண்கள் மட்டுமே குடும்பத்துக்காக எப்போதும் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது ஏன்? என்னதான் படித்திருந்தாலும் பெரிய வேலை பார்த்தாலும் பெண்கள் குடும்பத்துக்கு மட்டுமே கடமைப்பட்டவர்களா?

சரியான உடல் அமைப்பு வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதோடு உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளும் முயற்சி எடுப்பது ஏன்?

இயல்பாக இப்படி கேள்வி கேட்கும் குழந்தைகளை நம் பண்பாடும், கல்வி முறையும் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுகொள்ளப் பழக்கப்படுத்தி விட்டது. குழந்தைகளைக் கேள்வி கேட்க ஊக்குவிப்பதும், ஏன் இந்த கேள்வி கேட்க வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைத்துகொள்ள உதவியாக இருக்கும்.'' என்கிறார் யாமினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT