பைக்கில் வெளியூர்களுக்குப் பயணிப்பது சுகமான அனுபவம்.
அதுவும் மலைப் பிரதேசங்களில் வளைந்து, வளைந்து பயணிக்கும்போது அதன் சுகமும் அனுபவமும் தனி. இதனால் பைக் பிரியர்கள் மலைப் பிரதேசங்களில் பயணிப்பதை ரொம்பவே விரும்புவர்.
அந்த வகையில் அவர்கள் ரசித்து பயணிக்க வேண்டிய இடம் எது தெரியுமா? ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான வளைவுகளில் கோத்தகிரி தொடரில் பயணிப்பது தான். 'தென் இந்தியாவின் மறைந்திருக்கும் ரத்தினம்' என இந்தப் பாதை அழைக்கப்படுகிறது.
கோத்தகிரி மலைத் தொடர் ஊட்டியில் துவங்கி கோத்தகிரி- மேட்டுப் பாளையத்தை இணைக்கும் சாலை மொத்தம் 61கி.மீ. ஆகும். வழியில் சிறிது அதிர்ஷ்டமும் சேர்ந்து கொண்டால் யானைகள், சிறுத்தைகள், புலிகள் காட்டெருமைகள் மான்கள் என வனவிலங்குகளையும் காணலாம். 325 மீட்டரிலிருந்து 2,240 மீட்டர் உயரத்துக்கு ஏறும் சாலை. நேரான சாலையில் போகும்போது ஜாக்கிரதை தேவை. காரணம் யானைகள் குறுக்கே வரலாம்.
கோத்தகிரி வரை தேயிலைத் தோட்டங்கள் உண்டு. வனப் பகுதியாக மாறி சமவெளியின் மகிழ்ச்சியான காட்சிகளை ரசித்தபடி பயணிக்கலாம். ஹேர் பின் வளைவுகள் வேகமான வளைவுகள், மெதுவான இறுக்கமான வளைவுகள், மாற்றுப் பாதை கார்னர்கள் என பல வழியில் உள்ளன.
நல்ல அகலமான சாலைகள்தான். இருந்தாலும் கவனம் தேவை. பொறுமையைக் கடைப் பிடித்தால் நிறைவாகப் பயணிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.