தமிழ்மணி

இயற்​கை​யோடு இயைந்த வாழ்வு

சங் கப் பாடல் க ளின் முக் கிய சிறப் பி யல்பு மானிட வாழ் வின் மீது, அதன் இன்ப, துன் பங் க ளின் மீது அதற் குள்ள அக் க றையே ஆகும். ஆனால், எந்த ஒரு பாட லும் இயற் கையை விட்டு முற் றி லும் விலகி நிற்க இய லா

தினமணி

சங் கப் பாடல் க ளின் முக் கிய சிறப் பி யல்பு மானிட வாழ் வின் மீது, அதன் இன்ப, துன் பங் க ளின் மீது அதற் குள்ள அக் க றையே ஆகும். ஆனால், எந்த ஒரு பாட லும் இயற் கையை விட்டு முற் றி லும் விலகி நிற்க இய லாது. இயற்கை மானிட வாழ் வின் ஒரு நாட கம் அரங் கே றும் மேடை யா க வும், பின் ன ணி யா க வும் சங்க இலக் கி யத் தில் இடம் பெறு கி றது.

இ யற்கை அதன் எல் லாத் தன் மை க ளி லும் முக் கி யத் து வம் பெற்று, மனித வாழ்க் கையை வண் ண ம ய மாக் கு கி றது. அதா வது, இயற் கை யின் முன் னி லை யில் மனி தன் பெறும் உணர்ச் சி க ளைத் தெளி வா கக் காட் டு கி றது. காத ல னைப் பிரிந்து துய ரு றும் தலை விக்கு கடல் நீ ரின் "இழும்' எனும் ஓசை, தன் சொந்த அழு கு ர லைப் போலவே கேட் கி றது (கலி.129). கடல் அவ ளோடு சேர்ந்து அழு வ தா கத் தோன் று கி றது. சில வேளை க ளில் முரண் பாட் டுக் கு ரல் ஒலிக் கி றது. எதிர்ப்பு அல் லது அலட் சி யம் உண ரப் ப டு கி றது. அதே தலைவி, சில வேளை க ளில், அலை கள் நிரம் பிய கடல் அவ ளு டைய துய ரங் களை ஒரு பொருட் டா கக் கரு தா மல் இரக் க மற்று இருப் ப தா க வும் உணர் கி றாள் (ஐங்.141).

இவ் வாறு மாறி வ ரும் மன நிலை க ளின் அழுத் தத் தைக் காட்ட, சங் கப் புல வர் கள் இயற் கை யைக் கரு வி யாக் கிக் கொண் ட னர். இது உணர்வை பலப் ப டுத்த இயற் கை யைப் பயன் ப டுத் திய நிலை. அதே இயற்கை, உணர்வை ஏற் ப டுத் து வ தும் உண்டு.

இ யற் கை யின் வரு ணனை நம் கண் முன் காட் சி யாய் விரி யும் வண் ணம் அமைந்து சிறக் கி றது. கண் டும் கேட் டும் இன் பு று தற் கான நாட் டி யக் கலை யின் சொல் லோ வி யத்தை அக நா னூற் றுப் பாடல் க ளில் காண லாம். இனி மை யும் எழி லும் கொண் ட மைந்த ஆடற் கலை, சங் க கா லத் தமிழ் மக் க ளின் கலை வாழ்க் கை யில் உயர்ந்த இடம் பெற் றுத் திகழ்ந் தது. அவர் க ளு டைய பண் பா டு மிக்க வாழ்க் கை யைத் தம் பாடல் க ளில் புல வர் கள் பாடி, அக் க லைச் சிறப் பைப் போற் றி யுள் ள னர். மக் கள் மன் றத் தி லும் மன் னர் அவை யி லும் செல் வாக் குப் பெற் ற மை யால், புல வர் கள் நாவி லும் கற் ப னை யி லும் அக் கலை இடம் பெற் றது.

அ க நா னூற் றில் இடம் பெற்ற கபி ல ரின் இக் கற் பனை ஓவி யம், குறிஞ்சி நில வளத் தை யும், நலத் தை யும் குறிக்க எழுந் த தா யி னும், தமிழ் மக் க ளின் வாழ் வில் அன்று சிறப் பி டம் பெற் றி ருந்த இசை யும், நாட க மும் எய் தி யி ருந்த சிறப்பை அடிப் ப டை யா கக் கொண் டும் அமைந் துள் ளது.

கு றிஞ்சி, எழில் நல மிக்க நீல ம லைச் சாரல்; அங்கு நெடிது வளர்ந்து, அசைந் தாடி நிற் கும் மூங் கில்; அவற் றில் வண் டு க ளால் துளைக் கப் பட்ட துளை; அத னி டையே விரைந்து வீசும் காற்று; புல் லாங் குழ லின் ஒலி அங்கு தானாய் எழு கி றது. அரு கில் பாடிக் குதித் தோ டும் பனி நீர் அருவி எழுப் பும் "இழும்' எனும் ஓசை, எண்ண இனிக் கும் வண்ண மலர் கள்; அதில் தேனை உண்ண நாடிப் பறக் கும் வண் டு க ளின் இன் னோசை, தோகை விரித்து இனி மை யாக ஆடும் மயி லின் ஆட் டம்; இவற் றைக் கண் டும் கேட் டும் இன் புற்று வியக் கும் குரங் கு கள். இயற் கை யின் இந்த எழிற் கோ லத் தில் ஈடு பட்ட சங் கப் புல வ ரா கிய கபி லர், இதை அழ கு மிக் க தொரு நாட் டிய அரங் க மா கக் கற் பனை செய் கி றார்.

""ஆட மைக் குயின்ற அவிர் துளை மருங் கில்

கோடை யவ் வளி குழ லிசை யாகப்

பாடின் அரு விப் பனி நீர் இன் னி சைத்

தோடமை முழ லின் துதை குர லா கக்

கணக் கலை இகுக் கும் கடுங் கு ரல் தூம் பொடு

மலைப் பூஞ் சாரல் வண்டு யாழாக

இன் பல் இமி ழிசை கேட் டுக் கலி சி றந்து

மந்தி நல் லவை மருள் வன நோக் கக்

கழை வளர் அடுக் கத்து இயலி ஆடும் ம யில்

நன வுப் புகு விற லி யில் தோன் றும்''

(அகம். 82: 1}10)

க வி ஞர் தம் கற் ப னை யில் குறிஞ்சி மலைச் சா ரல் அழ கிய ஆடு க ள மா கி றது; மூங் கில் துளைக் காற் றின் இசை குழ லோசை; முழங்கி இறங் கும் அரு வி யின் ஒலி முழ வோசை; மான் க ளின் சத் தம் பெரு வங் கிய ஓசை; வண் டு க ளின் முரற்சி யாழோசை என அமைந்து, இனி ய தொரு குழு வின் இசை யாக விளங் கு கி றது. மயில் விறல் பட ஆடும் விற லி யா க வும், மந் தி கள் பார் வை யா ளர் க ளா க வும் அமைந் து வி டு கின் றன. இக் காட் சி யில் ஈடு ப டு ப வர் கள் நாட் டிய அரங் கம் முழு வ தை யும் தங் கள் அகக் கண் ணால் காண் ப தோடு, அரங் கில் உள் ளோ ரில் ஒரு வ ராய் அமர்ந்து நாட் டி ய இன் பம் துய்க் கும் உணர் வை யும் பெறு கின் ற னர்.

சங் க கா லத் தமிழ் மக் கள் இயற் கை யோடு இயைந்த வாழ் வி னர். காடு, மலை, கடல், வயல் ஆகிய நானில இயற்கை, இள மை யில் அவர் க ளின் தாய் ம டி யா க வும், வளர்ச் சி யில் பள் ளி யா க வும் திகழ்ந் தது. திங் க ளும் தென் ற லும், புல் லும் பூக் க ளும், மர மும், பற வை யும் விலங் கும் அவர் க ளுக்கு அறி வூட் டும் ஆசி ரி யர் க ளா க வும், ஆன்ம நலம் காட் டும் குரு வா க வும் அமைந் தன. இயற் கை யின் மெüன மொழி களை உண ரும் உள் ளம் படைத் தி ருந் த னர் சங் க கால மக் கள். அவற் றின் அழ கைக் கண்டு உணர்ந்து துய்க் கும் திறன் பெற் றி ருந் த னர். சங் க கா லப் புல வர் கள், இயற் கை யின் புறத் தோற்ற அழ கில் மட் டுமே ஈடு பட் டுப் பாட வில்லை. மக் கள் தம் வாழ்வு நெறிக் க மைந்த நல் ல தொரு பின் பு ல மா கவே அப் பா டல் க ளில் இயற்கை அமைந் துள் ள மை யைக் காண மு டி கி றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT