தமிழ்மணி

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா? "கவிதை'  வடசொல்லே! 21.11.10 அன்று தமிழ்மணி -  இலக்கிய விவாதத்தில் வெளியான, "கவிதை தமிழ்ச் சொல்லே!' என்று கட்டுர

மா.சின்னு

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?



"கவிதை'  வடசொல்லே!

21.11.10 அன்று தமிழ்மணி -  இலக்கிய விவாதத்தில் வெளியான, "கவிதை தமிழ்ச் சொல்லே!' என்று கட்டுரையாளர், ""கம்பன், "சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி' என்று பாடியதால் கவி, கவிதை என்ற சொற்கள் செம்மொழிப் (தமிழ்) பதங்கள் என்கிறார். இது மிக மிகத் தவறு. இவ்வாறு கூறினால், திருவள்ளுவர் பயன்படுத்தியதால், "ஆதி' (குறள்-1), "பாக்கியம்' (குறள்-1141) போன்ற வடசொற்களையும் தமிழ் என்று கூறிவிடலாம். "கவி' செம்மொழிச் சொல்லாயின் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கும்.

கட்டுரையாளர் காட்டும் கம்பனுடைய அதே பாடலில், சவி (ஒளி) என்ற வட சொல்லும் வருகிறது. இது சவிதா, சவிதை என்று திரிந்து வழங்கப்படுவது போலவே, கவி என்ற வட சொல்லும் கவிதா, கவிதை என்று திரிந்து வழங்கப்படுகிறது. சீதா, நர்மதா என்ற வடசொற்கள், சீதை, நர்மதை என்று தமிழில் வழங்கப்படுவதைக் காணலாம்.

மேலும், "கவ்' என்பதற்கு வீண் ஆராய்ச்சி செய்து "ஈர்ப்பது' என்று பொருள் கூறியுள்ளார். கவ், கெü - வாயினால் பற்றுதல், வவ், வெü - கையினால் பற்றுதல் என்பதே சரியான பொருள். ஆகவே, "கவிதை' என்பது வடசொல்லே!

இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

"கல்லாடம்' என்ற நூலை இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்றும், 13-ஆம் நூற்றாண்டு என்றும், 16-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதி என்றும், கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்றும் தமிழறிஞர்களால் கூறப்படுகிறது. கல்லாடரின் காலம் எது? கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்தது உண்மையா?

-ஏகம்பர் நாயகி,  திருவிடைமருதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT