முகப்பு
தமிழ்மணி

இராமன் -  யாருக்குச் சொந்தம்?

சைவர்களும் வீரசைவர்களும் இராமர் என்ற சொல்லை தங்கள் தங்கள் சமயத்திற்கு உரியதாகக்

Updated On : 25 நவம்பர், 2012 at 12:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:11 AM

வடமொழியில் "ராம' என்கிற சொல் உண்டு. அச்சொல்லுக்கு "ரமித்தல்' என்று பொருள் கூறுவர். இச்சொல்லைத் தமிழர்கள் "இராமன்' என்று ஆண்பாலாகவும், இராமி என்று பெண்பாலாகவும், இராமர் என்று பலர்பாலாகவும் வழங்கி வருகின்றனர்.

÷இராமன் அல்லது இராமர் என்னும் சொற்களை வைணவ சமயத்தினர் தங்கள் சமயத்திற்குரிய வைணவச் சொல்லாகக் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக மிகச்சிறந்த சொல்லாகக் கருதுவர். இது இப்படியிருக்க, சைவர்களும் வீரசைவர்களும் இராமர் என்ற சொல்லை தங்கள் தங்கள் சமயத்திற்கு உரியதாகக் கருதுகின்றனர். இராமன் என்ற சொல் எச்சமயத்திற்கு உரிய சொல் என்பது பற்றிய சில செய்திகளை விறுப்பு-வெறுப்பின்றி அறிவது நல்லது.

அரா - இச்சொல் வட சொல்லாகும். சிவபெருமானைக் குறிக்கும் பல்வேறு பெயர்களுள் அரா என்பதும் ஒன்று.

Advertisement

உமா - இச்சொல் வடசொல்லாகும். உமாதேவியைக் குறிக்கும் பல்வேறு பெயர்களுள் உமா என்பதும் ஒன்று.

÷மேற்குறித்த அரா, உமா என்ற இரண்டு சொற்களின் ஈற்றில் உள்ள ரா, மா என்ற இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் ராமா என்ற சொல் தோன்றும். மேற்கூறிய வட சொல்லாகிய ரா என்பது சிவனையும், மா என்பது உமா தேவியையும் குறிக்கும் என்பதால் ராமா என்கிற சொல் சிவனையும் உமாவையும் குறிக்கும் என உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆதலால்தான் சைவர்கள் இச்சொற்களை சிவராமன் என்றும், அபிராமி என்றும் தம் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கின்றனர்.

÷வீரசைவ சமயத்தில் ஐந்து ஆசாரியார்கள் முதன்மையானவர்களாகக் கருதப்படுவர். அவ் ஐயருள் ஒருவரின் பெயர் ஏகோராமர் என்பதாகும். சிவப்பிரகாசர் தாம் அருளிய பிரபுலிங்கலீலை என்னும் வீரசைவ நூலுள் சித்தராமையர்கதி என்னும் அத்தியாயத்தை அமைத்துள்ளதும் கருதத்தக்கது. ஆதலால், இராமர் என்னும் சொல் பல சமயத்தினருக்கும் உரிய பொதுமைச் சொல்லாகத் திகழ்கிறது.

÷இதுபற்றி அறிஞர் பெருமக்களும் ஆன்மிகவாதிகளும் மேலும் ஆராயலாமே...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.