முகப்பு
தமிழ்மணி

மரக்காயனாரா மாக்காயனாரா?

"ஏலாதி' ஆசிரியர் கணிமேதாவியாரின் ஆசிரியர் (அல்லது தந்தை) பெயர்

Updated On : 24 நவம்பர் 2012, 11:26 pm IST
பகிர்:

"ஏலாதி' ஆசிரியர் கணிமேதாவியாரின் ஆசிரியர் (அல்லது தந்தை) பெயர் மரக்காயனார் என்று தமிழ்மணியில் வெளியானதைக் கண்டேன். ஏலாதி பதிப்புக்களிலும், ஏலாதி பற்றி எழுதியோரும் மாக்காயனார் என்றே குறிக்கின்றனர். ஓலைச்சுவடியில் இரண்டும் ஒரே மாதிரியே காணப்படும்.

ஆனால், சங்க இலக்கியங்களில் மாமூலனார் (குறு.11), மாமலாடனார் (குறு.46), மாவளத்தனார் (குறு.3481), மாசாத்தனார் (புறம்.227), மாசாத்தியார் (அகம்.384) என வருவது நோக்க மாக்காயனார் எனக் கொள்வதே பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது.

(ஏலம் ஆதி 6 பொருள் சேர்ந்தது ஏலாதி சூரணம், ஏலம் ஆதி 14 பொருள் சேர்ந்தது ஏலாதி கிருதம். ஏலம் ஆதி 20 பொருள் சேர்ந்தது ஏலாதி கணம்).

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.