வெளவால் பறவையா? பாலூட்டியா? - என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. வெüவால் பறக்கும் தன்மையுடைய பாலூட்டி வகை உயிரியாகும். பாலூட்டிகளில் பறக்கும் ஆற்றல் பெற்ற ஒரே உயிரி வெüவால் மட்டுமே! விலங்கியல் அறிஞர்கள் வெüவாலின் உடலமைப்பின் அடிப்படையில் பாலூட்டி வகுப்பில் வெüவாலை வகைப்படுத்தி வைத்துள்ளனர். வெüவாலானது பறவை என்பது பற்றிய குழப்பம் பல்லாண்டு காலமாகவே நிலவி வந்துள்ளது.
÷பழமை வாய்ந்த பாபிலோனியன், பெர்சியன் மற்றும் அரேபிய கருத்துகளின்படி வெüவால் பறவைகளின் வரிசையிலே கூறப்பட்டுள்ளது. விலங்கியலாளர்களிடம் நிலவிய இக்கருத்து வேறுபாடுகள் காரணமாக, நீண்ட காலத்திற்குப் பின், நீண்ட விவாதத்திற்குப் பின் வெüவால் பாலூட்டி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
÷வெüவாலைப் பற்றிய கருத்துகள் செல்வியல் இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை குறுந்தொகையில், குறிஞ்சித் திணை 201-ஆம் பாடலாகும்.
""அமிழ்தம் உண்க நம்அயல் இல்ஆட்டி
பால் கலப்பு அன்ன தேக்கொக்கு அருந்துபு
நீல மென்சிறை வள் உகிர்ப்பறவை
நெல்லி யம்புளி மாந்தி அயலது
முள்இல் அம்பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென் றாளே''
"தோழி! பாலைக் கறந்தாற்போல இனிமையுடைய தேமாவின் பழத்தைத் தின்று கரிய மெல்லிய சிறகுகளையும் கூரிய நகங்களையும் உடைய வெüவால், நெல்லியின் புளித்த காயையும் உண்டு, அயலில் உள்ளதாகிய முள்ளில்லாத அழகிய பருத்த மூங்கிலின்கண்ணே தொங்குகின்றன. அத்தகைய மூங்கில் கோல்கள் உயர்ந்து வளர்ந்த சோலைகளையுடைய மலைகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன் திருமணத்துக்கு உரியவற்றோடு வருவான் என்று அயன்மனைக் கிழத்தி கூறினாள் ஆதலின், அவள் அமிழ்தத்தை உண்பாளாக!' என்பது பாடலின் கருத்து.
÷ மேலும், தலைவியின் கூற்றாகக் குறுந்தொகைப் பாடல் 352-இல் பாலைத் திணையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுவதாவது:
""நெடுநீர் ஆம்பல் அடைப்புறத் தன்ன
கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை
அகல் இலைப் பலவின் சாரல் முன்னிப்
பகல் உறை முதுமரம் புலம்பப்போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே''
தலைவன் பிரிந்த காலத்தில் தோழியை நோக்கி, "தலைவன் பிரிவினால் மாலைக்காலம் எனக்கு நோய் தருகிறது' என்பதுபட தலைவி கூறுவதுபோல் அமைந்தது.
÷"தோழி! ஆழமான நீரினிடத்து வளர்ந்த ஆம்பலினது இலையின் புறத்தைப் போன்ற வளைந்த மெல்லிய சிறகை உடையனவாகிய கூரிய நகங்களை உடைய வெüவால்கள், அகன்ற இலைகளை உடைய, பலா மரங்களை உடைய மலைச்சாரலை நோக்கி பகற்பொழுதில் தான் உறைந்த பழைய மரம் தனிமையாகும்படி செல்லும் சிறிய புல்லிய மாலைக்காலம் உளதாதலை, அத் தலைவரைக் காணாக் காலத்தில் நான் உணர்ந்தேன்' என்கிறாள்.
÷இவ்விரு பாடல்கள் தவிர அகநானூறு உள்ளிட்ட ஏனைய செல்வியல் பாடல்களிலும் வெüவால் "பறவை' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ் இணையக் கல்விக் கழக வகைப்பாட்டியலில் வெüவாலானது பறவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. செயல் அடிப்படையில் தமிழில் பறப்பவை "பறவை' என வகைப்படுத்துதல் சரியெனத் தமிழ் அறிஞர்கள் கூறியபோதும், அமைப்பு அடிப்படையில் பாலூட்டி இனத்தில் வெüவாலை வகைப்படுத்துதல்தான் பொருத்தமானதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.