முகப்பு
தமிழ்மணி

மரபுத் தொடர்கள்...

கேளல் கேளிர் - பகையும் நட்புமில்லாத அயலார்கைம்மிகுதல் - அளவுகடத்தல்கையடித்தல் - உறுதி தருதல்

Updated On : 24 பிப்ரவரி, 2013 at 2:49 AM
பகிர்:

கேளல் கேளிர் - பகையும் நட்புமில்லாத அயலார்

கைம்மிகுதல் - அளவுகடத்தல்

கையடித்தல் - உறுதி தருதல்

Advertisement

கைப்பாடுபடுதல் - அரும்பாடுபடுதல்

கையைக்கடித்தல் - பொருள் நஷ்டமாதல்

கையோடு கையாய் - காரியத்தோடு காரியமாய், செயலோடு செயலால்

கொஞ்ச நஞ்சம் - சிறிதளவு

கொடி விடுதல் - மிகுதியாதல்

கொழு கொம்பு - பற்றுக்கோடு

கோலாகலம் - கூக்குரல், ஆடம்பரம்

சடைவாறுதல் - இளைப்பாறுதல்

சாலமாலம் - வஞ்சகம்

சித்திரைச் சுழியன் - குறும்பன்

சேர் கொடுத்தல் - காட்டிக்கொடுத்தல்

சொட்டைச் சொல் - பழிச்சொல்

தக்கடி வித்தை - ஏமாற்று

தடங்கோலுதல் - வழிசெய்தல்

தட்டுண்டு போதல் - தடைப்படுதல்

தட்டுமாறி - ஏமாற்றுபவன்

தட்டுமானம் - தந்திரவழி

தாட்டுப் பண்ணுதல் - காலம் கடத்துதல், மறுத்தல்

தந்திதந்தியாய் - வரிசை வரிசையாய்

தலைப்பாமாறி - பெரும் மோசக்காரன்

தலையெடுத்தல் - மேல்நிலைக்கு வருதல்

தான்தோன்றி - செருக்குடையவன்

திசைப்புரட்டன் - பெரும் பொய்யன்

திமிலகுமிலம் - மகிழ்ச்சி மிகுதி

திறுதிறுத்தல் - அஞ்சி விழித்தல்

தீரக்கழிய - மிக அதிகமாய்

துப்பு கெட்டவன் - அறிவற்றவன், அறிவுகெட்டவன்

துறைபோதல் - நிரம்புதல், கற்றுத் தீர்தல்

தெம்மாடி - அறிவீனன், ஒன்றுக்கும் உதவாதவன்

தொடுபிடியாக - இடைவிடாமல்

நட்டாமுட்டி - வஞ்சகம்

நழுநழுத்தல் - பிடிகொடாது பேசுதல்

நீக்குபோக்கு - இணக்கமாயிருத்தல், மரியாதை

நெளிவு சுளிவு - ஏற்றத்தாழ்வு

நேர்ந்து போதல் - சம்பவித்தல்

பக்கஞ் செய்தல் - ஒளி விடுதல்

பக்கடுத்தல் - நொறுங்குதல்

படிப்படியாய் - சிறுகச்சிறுக

பணி கொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல்

பண்விடுதல் - நிலைகுலைதல்

பாக்கி சாக்கி - மிச்சம் மீதி

பாடு பறப்பு - கவலை

பாரதூரம் - பெருந்தூரம், முதன்மை

புரிதிரித்தல் - கெடுக்க வழிதேடுதல்

புரிமுறுக்குதல் - கோள் சொல்லுதல்

புப்புத் தட்டுதல் - பற்று விட்டுப் போதல்

பூட்டழித்தல் - கட்டுக்குலைத்தல்

பையப்பைய - மெல்ல மெல்ல

பொட்டுப்பாடி - சிறுபண்டம்

போக்கிரி சாக்கிரி - கதியற்றவன்

வகைதொகை - விவரம்

வம்பு தும்பு - வீண் பழிச்சொல்

வரையறை - எல்லை, அளவு

வாரம் பாடுதல் - பின்பாட்டுப் பாடுதல்

வீற்றுவீற்றாக - வெவ்வேறாக

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.