தமிழ்மணி

அகத்தியரின் மாணாக்கர்கள்

கத்தியம்' என்ற மிகப்பெரிய இலக்கண நூலைப் படைத்தவர் அகத்திய முனிவர்.

தினமணி

கத்தியம்' என்ற மிகப்பெரிய இலக்கண நூலைப் படைத்தவர் அகத்திய முனிவர். தமிழ்மொழியில் கூரிய அறிவும், ஆழ்ந்த புலமையும் கொண்டவர் அகத்தியர். பொதிய மலையில் இருந்து இன்றைக்கும் தமிழ்மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுவது சான்றோர் மரபு. இவருடைய மாணாக்கர்களாக இருந்தவர்கள் யார்யார் என்பதை புறப்பொருள் வெண்பாமாலை சிறப்புப் பாயிரத்தின் மூலம் அறியலாம்.

மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்

தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்

தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த

துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதல்

பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த

பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்.

தொல்காப்பியர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகள், வாய்ப்பியன், பனம்பாரனர், கழாரம்பன், அவிநயன், காக்கைப்பாடினி, நற்றத்தன், வாமனன் ஆகிய பன்னிருவர் அகத்தியரின் மாணவர்கள் என்பதையும் அவர்கள் யாத்த நூல்தான் பன்னிருபடலம் என்பதையும் மேற்கண்ட பாடல் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT