முகப்பு
தமிழ்மணி

வெள்ளாங்குருகே...

தமிழ் இலக்கிய வரலாற்றில் கிள்ளை, அன்னம், தமிழ் எனப் பலவற்றைத் தூதனுப்பியப் பதிவுகள் உண்டு. தலைவனின் பிரிவால் வாடும் தலைவி, சிறுவெள்ளாங்குருகு எனும் வாலாட்டிக் குருவியைத் தூதனுப்பியதாக வெள்ளிவீதியார் எனும் பெண்பாற்புலவரின் நற்றிணைப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:42 AM
பகிர்:

தமிழ் இலக்கிய வரலாற்றில் கிள்ளை, அன்னம், தமிழ் எனப் பலவற்றைத் தூதனுப்பியப் பதிவுகள் உண்டு. தலைவனின் பிரிவால் வாடும் தலைவி, சிறுவெள்ளாங்குருகு எனும் வாலாட்டிக் குருவியைத் தூதனுப்பியதாக வெள்ளிவீதியார் எனும் பெண்பாற்புலவரின் நற்றிணைப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

தலைவனின் பிரிவைத் தாளாது இடை மெலிந்து, உடல் இளைத்து, கைவளையல்கள் கழன்றுவிழத் தவிக்கும் தலைவி, தனது நிலையை வெள்ளாங்

குருகிடம் சொல்லி தலைவனுக்குத் தெரிவிக்குமாறு கெஞ்சும் பாடல் இது.

Advertisement

""சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!

துறைபோ கறுவைத் தூமடி யன்ன

நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே

எம்மூர் வந்தெம் வண்டுறைத் துழைஇ

சினைக் கெளிற்றார் கையை அவர் ஊர்ப்பெயர்தி

அனைய அன்பிலையோ பெருமறவியையோ

ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங்

கழனி நல்ஊர் மகிழ்நர்க்கென்

இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே!''

(நற்-70)

"வெண்ணிற இறகுகளை உடைய குருகே! எங்களூர் குளத்திற்கு வந்து, நன்றாகப் பருத்த கெளுத்தி மீன்களைத் தேடித்தேடி தின்று பசியாறுகிறாய். நீர்வளம் மிக்க வயல்களையுடைய என் தலைவனின் ஊருக்குச் சென்று பசியாறும் நீ, அவரது பிரிவால் வாடும் எனது நிலையை ஏன் அவருக்குத் தெரிவிக்க மறந்தாய்! என் மீது இரக்கமிலையோ? இனியேனும் மறக்காமல் சென்று தெரிவிப்பாயாக' எனக் கெஞ்சுகிறாள் தலைவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments