முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 7

உலகத்தியற்கையாம் இயங்கியலைத் தெளிவாக அறிந்த அறிவர் பள்ளியில் கால் வைத்தபோதே சிறார்கள் உணர வேண்டும் என்று எழுத்தைப் படைத்தனர்.

பகிர்:

உலகத்தியற்கையாம் இயங்கியலைத் தெளிவாக அறிந்த அறிவர் பள்ளியில் கால் வைத்தபோதே சிறார்கள் உணர வேண்டும் என்று எழுத்தைப் படைத்தனர்.

வட்டமே இயக்கம் - உயிரின் அடையாளம் இயக்கமறிதல் என உணர்ந்து, வட்டெழுத்து, கோலெழுத்து, கண்ணெழுத்து எனப் படைத்தனர். வட்ட எழுத்துத்தானே, வட்டெழுத்து! கோல், கோள், கோலி, கோலம், கோளம் வட்டம்தாமே! கண் வடிவம் வட்டம்தானே! நாளும் கோளும் விண்மீனும் நீர்ச்சுழலும் சுழல்காற்றும் வலம் சுழலல் வட்டம் தாமே! அதனால் உயிர் இயக்கமாம் எழுத்துகள் அனைத்தையும் வட்டமாக அமைத்தனர்; வலச்சுழற்சி அன்றி, இடச்சுழற்சியாக எவ்வெழுத்தையும் படைத்திலர்.

"அ' - மேலே குறுவட்டம், கீழே நெடுவட்டம்.

Advertisement

"ஆ' - மேலே குறுவட்டம், கீழே நெடுவட்டம், நெடிலுக்காகக் கீழே ஒரு குறுவட்டம்.

"இ' - மேலே குறுவட்டம், கீழே நெடுவட்டம், மேலுமொரு கொம்பு வட்டம்.

"ஈ' -

என்பது பின்னர் வந்த வடிவம். நிலைக்கால் ஊன்றி உள்ளும் புறமும் புள்ளி இடல் இது.

எச்.ஏ.கிருட்டிணர் எழுதிய சிலப்பதிகார ஏடு! ஆண்டு 1876. அதில் "இ' என்பதன் மேல் வளைவில் ஒரு வட்டம் (இ) உள்ளது. வள்ளலார் எழுத்தில் அப்படியே உள்ளது. ஆதலால் நான்கு வட்டம் உடையது "இ'.

"உ' - வட்டம்; "ஊ' - வட்டம்; கீழ் உகரம் வட்டம்; மேல் நெடில் அடையாளத்திலும் வட்டம்; "எ' - வட்டம்; "ஏ' - வட்டம். முன்னே, குறில் " எó' என்றும் நெடில் "எ' என்றும் இருந்ததை வீரமாமுனிவர் நெடிலுக்குக் கீற்று ஒன்று இழுத்து வேறுபாடு காட்டினார்.

"ஐ' - வட்டம்; "ஒ' - வட்டம்; "ஓ' வட்டம்; ஆய்தமோ முப்பாள் புள்ளி (ஃ).

"க்' ககர ஒற்று அல்லது மெய் அல்லது புள்ளி, அல்லது உடல். "இக்' என்றுதானே சொல்ல முடியும்? க் முதல் ன் முடிய "இகரம்' இல்லாமல் சொல்ல முடியுமா? முடியாது!

உயிர் இல்லாமல் "மெய்' இயங்குமா? சவம் அல்லது பிணம், தானே நடக்குமா?

""செத்தாரைச் சாவார் சுமப்பர்'' என்பது பழமொழி! "க' எனச் சொல்லலாம். பதினெட்டு மெய்யையும் சொல்லலாம். எதனால்? அவை "உயிர்மெய்' (உயிரோடு கூடிய உடல்) ஆதலால். உயிரையும் மெய்யையும் இணைத்து இயங்கியல் ஆக்கியது ஏன்? எழுத்தைச் சுருக்கச் செய்த அரிய உத்தி அது.

"முருகன்' எத்தனை எழுத்து? நான்கு எழுத்துத்தானே. "ஙமதமஎஅச' எத்தனை எழுத்து? ஏழெழுத்து இல்லையா? "தமிழ்' மூன்றெழுத்துத்தானே! "பஅஙஐக', "பஏஅஙஐக', "பஏஅஙஐழ' ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் ஆகவில்லையா? மு-ரு-க-ன் = முருகன் எழுத்தைச் சொன்னால் சொல் வந்துவிடுகிறதே! எம்-யு-ஆர்-யு-ர்-உ-ன் எழுத்தின்படி சொல்லாகுமா? அ - ஹ ஆனது ஏன்? எழுத வட்டம்தான் எளிது - இயல்பு.

ஹ, க்ஷ, ஸ்ரீ, க், ங், ச் - என வடிவமாற்றம் இயங்கியல் மாற்றமாம். உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம், ஆய்தம், அளபெடை, குறுக்கம், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் எழுத்துப் பகுப்பே, மெய்யியல் (தத்துவம், பிலாசஃபி) பகுப்பாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments