தமிழ்மணி

ஆசிரிய மேகம்!

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டுத் தமிழ் மொழியில் வல்லுநரானவர் தேவராசப் பிள்ளை. இவர் பல நூல்களை இயற்றியுள்ளார்.

புலவர் ப. சோமசுந்தர வேலாயுதம்

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டுத் தமிழ் மொழியில் வல்லுநரானவர் தேவராசப் பிள்ளை. இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று குசேலோபாக்கியானம். இந்நூலின் தொடக்கத்தில் கடவுள் வணக்கம் முதலிய கூறி, புதுமையாக ஆசிரிய வணக்கமும்
கூறுகிறார்.
ஆசிரிய வணக்கப் பாடலில், "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திரிசிராமலையில் வளர்ந்து கலைக்கடலை உண்டு, தனது மனமாகிய மலையில் தமிழ் மழையைப் போதுமளவு பொழிந்த அறிவாகிய பொய்கையை நிரப்பிய மீனாட்சி சுந்தரமாகிய மேகத்தை விரும்பி நாம் வாழ்வோம்' என உருவக அணியில் வைத்துப் பாடியுள்ளார்.
இப்பாடலில் மனத்தை மலையாகவும்; தமிழை மழையாகவும் அறிவைப் பொய்கையாகவும்; ஆசிரியப் பிரானை மேகமாகவும் உருவகம் செய்துள்ளது படித்து இன்புறத்தக்கது.

சீராருந் திரிசிரா மலையின்வளர்ந்
தெக்காலுஞ் சிறப் பினோங்கும்
ஏராருங் கலைக்கடன் முற்றுண்டாங்கு
நின்றெழீஇ யென்வி வேக
வாராருந் தடம்நிரம்ப மனப்பறம்பின்
இனியதமிழ் மாரி பெய்த
பேராரு மீனாட்சி சுந்தரதே
சிகமுகிலைப் பேணி வாழ்வாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT