தமிழ்ச் செல்வங்கள்: பல்லி
பல்லி வியப்பான ஓர் ஊர் உயிரி. பளபளப்பான சுவரிலும் பிடிப்போடு ஊர்ந்து செல்லும். அதன் உருவத்தொடும் ஒட்டாத நெடிய பல்லை உடையதால் "பல்லி' எனப் பெயர் பெற்றது. அதன் ஒலியும் அவ்வாறே வலுத்து ஒலிப்பது.
பல்லி வியப்பான ஓர் ஊர் உயிரி. பளபளப்பான சுவரிலும் பிடிப்போடு ஊர்ந்து செல்லும். அதன் உருவத்தொடும் ஒட்டாத நெடிய பல்லை உடையதால் "பல்லி' எனப் பெயர் பெற்றது. அதன் ஒலியும் அவ்வாறே வலுத்து ஒலிப்பது.
தொலைவில் நிற்கும் பூச்சிகளைப் பற்றும் வகையில் நாவும் நெடியது. அதன் ஒலி, ஒலிக்கும் வகை, ஒலி வரும் திசை, நம் மேல் விழுந்தால் விழுந்த இடம் இவற்றைக் கொண்டே எதிர்கால விளைவை அறிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டாகியமையால் "பல்லி கூறும் பலன்' என நூல்களும் உருவாகிவிட்டன.
ஒரு நாள் வீட்டுச் சுவர் ஒன்றைத் தற்செயலாக நோக்க, இரண்டு பல்லிகள் சண்டை இட்டன. இதன் பல்லால் அதன் கழுத்தைக் கவ்வ, அதன் பல்லால் இதன் கழுத்தைக் கவ்வ மாறி மாறி விடாமல் தொட ர்ந்தன. மல் வீரர்கள் ஒருவரை ஒருவர், "பார்த் து விடுகிறேன்' எனப் பாய்ந்தும் சுற்றியும் சுழன்றும் விடாமல் தாக்குவது போல, இப் பல் வீரர்களும் மாறி மாறி முட்டுவதும் மோதுவதும் கழுத்துப் பகுதியைப் பல்லால் கெளவுவதும் தொடர்ந்தது. அதன் முடிவைப் பாராமல் அசைவது இல்லை என யானும் நின்று நோக்கினேன்.
ஐம்பது நிமிடங்கள் ஆகியும் விடாப் போர். ஒரு பல்லிக்கு மற்றொரு பல்லியின் கழுத்து வாய்ப்பாகக் கிடைத்துவிட்டது. நீண்ட பல்லால் கழுத்தை அழுத் திய அழுத்தத்தை விடவே இல்லை! கட்டாயம் இக்கடி உயிருக்கு உலை வைத்தாலும் வைக்கும் என்னும் எண்ணத்தில் நான் ஆழ்ந்து நோக்கி நின்றபோது ஒரு வியப்பான செய்தி நிகழ்ந்தது.
எங்கிருந்தோ இவ்விரண்டினும் முரட்டுப் பல்லி ஒன்று வந்தது. கவ்வியும் கவ்வப் பட்டும் விடாமல் போராடிய அவ்விரு பல்லிகளின் இடையே புகுந்து ஒரு முட்டு முட்டி விலக்கியது. இரண்டும் இரண்டு பக்கமாகச் சென்றன. சண்டையைத் தீர்த்து வைத்த பல்லி வேறொரு பக்கம் சென்றது. பல்லி எனப் பெயரிட்டவன் கூர்மையனே! சாத்திரம் ஆக்கியவன் இட்டுக்கட்டல் வல்லனே! இப் பல்லிக்குக் "கெளளி' எனப் பெயரிட்டவனே இவர்களிலும் தேர்ந்த நோக்கன் என்பதே!
""புத்தகக் கவளி ஏந்தி'' என்னும் பெரிய புராணம், ""கவவுக்கை நெகிழாமல்'' என்னும் சிலப்பதிகாரம், ""கவாட புரம்'' (கதவ புரம்) என்னும் தமிழ் இடைச் சங்கம் இருந்த ஊர்ப் பெயர் என்பவை என நினைவோட்டத்தில் கிளர்ந்தன. மக்கள் வழக்கிலும் "கெளளி' இடம் பெற்றது வியப்பாயிற்று.
வெற்றிலைக் கொடிக் காலில் இலை பறிப்பார் எண்ணி எண்ணி அடுக்கி வாழை நாரால் ஒழுக்குறக் கட்டி அதனைக் "கெளளி' என வழங்குவது கருதினேன். இரண்டு பக்கமும் காம்புகள் தெரிய இலைப் பகுதியொடு இலைப் பகுதி கவ்விக்கிடக்க வைத்திருக்கும் அழகும், அக் கட்டுக்குப் பெயரிட்ட நேர்த்தியும் நினைக்க உவப்பாயின. பல் நீண்டவனைப் "பல்லாயி' என எள்ளி நகைப்பாரிலும், வெற்றிலையைக் கவ்வக் கலந்து கட்டிக் "கெளளி' ஆக்கியவர் சால்பர் அல்லரோ!
""கொவ்வைச் சாறும் கோள் வெடியுப்பும்
கவ்வக் கலந்து கட்டியில் பூசுக''
என்ற வள்ளலார் மருத்துவக் குறிப்பு நினைவில் ஓங்கி நின்றது.
Advertisement
- தொடர்வோம்