தமிழ்மணி

துன்பத்தைப் பகிர்ந்து கொள்க!

பழமொழி நானூறு
 தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு
 உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
 அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
 மறையார் மருத்துவர்க்கு நோய். (பா-88)
 தெளிவாக அறைதலைப் பொருந்திய (ஒலிக்கின்ற) அழகிய வளையினை உடையாய்! பிணி நீங்க விரும்புவோர், வைத்தியனுக்கு நோயை மறைத்துச் சொல்லார் (விளங்கச் சொல்லுவர்). (அதுபோல), மிகவும் மனம் இரங்கி, தனது துன்பத்தை அறியின் தீர்ப்பர் என்று தம்மால் கருதப்பட்டார்க்கு, தாம் அடைந்த துன்பத்தைக்
 கூறுவார்கள் அறிவுடையோர். (க-து.)அறிவுடையோர் தீர்க்கத்தக்கவரிடம் தம் குறையைக் கூறுவார்கள். "மறையார் மருத்துவர்க்கு நோய்' என்பது பழமொழி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT