பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்துவாளாண்மை யாலும் வலியராய் தாளாண்மைதாழ்க்கு மடிகோள் இலராய் வருந்தாதார்
வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய் தாளாண்மை
தாழ்க்கு மடிகோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று (பாடல்-175)
பிறருக்கு உபகாரம் செய்து, வரும் விருந்தினரையும் பாதுகாத்து, வெம்மையான போரினிடத்தே வாளாண்மையாலும் வலிமையுடையவர்களாக விளங்கி, தாளாண்மை என்னும் முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலும் இல்லாதவர்களாக, இந்த வாழ்விலேயே வருந்தியும் ஈடுபடுதல் சிறந்தது. அப்படி வருந்தாதார் வாழ்க்கை என்றும் திருந்துதல் இல்லை என்பது உண்மையாகும். சோம்பலின்றி, வாழ்க்கை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது கருத்து. " வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று' என்பது பழமொழி.