முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கரப்புடையார் வைத்த கடையும் உதவாதுரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

கரப்புடையார் வைத்த கடையும் உதவா
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல்
சுரத்திடைப் பெய்த பெயல். (பாடல்-169)


வறியோர்க் கீயாது மறைத்து வைப்பவர்கள்,  அரிதின் முயன்று, தேடிப் புதைத்து வைத்த பொருள்,  பகைவரைக் கடிதலுடைய அரசர்க்கே பயன்படுவதல்லாமல், அவன்வழி வந்தவர்க்கும் உதவுவதில்லை. (அங்ஙனமின்றி),  வறுமையால் துன்பம் மிகுந்தவர்களுக்குப் பயன்படுமாறு ஒரு பொருளை ஈதல்,  பாலை நிலத்தின்கண் சொரியப்பட்ட மழைநீரை ஒக்கும். "சுரத்திடைப் பெய்த பெயல்' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →