முகப்பு
தமிழ்மணி

அரசன் செயலுக்குப் பொறுப்பு எவர்?

குற்றமற்ற செங்கோலனான சினமுடைய வேந்தனது தீமையைக் குற்றமற்ற பக்கத்திலுள்ள உள்படு கருமத் தலைவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

பழமொழி நானூறு
 செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
 பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்
 செவ்வாய் முறுவல்நற் சின்மொழியாய் செய்தானை
 ஒவ்வாத பாவையோ இல். (பாடல்-226)
 குற்றமற்ற செங்கோலனான சினமுடைய வேந்தனது தீமையைக் குற்றமற்ற பக்கத்திலுள்ள உள்படு கருமத் தலைவர்களே ஏற்றுக் கொள்வார்கள். செய்தவனை ஒத்திராத பாவை என்பதோ உலகத்தில் எதுவும் இல்லை. செய்பவன் தன் கருத்துக்கு ஒத்திராத சித்திரம் எழுதுவதில்லை. அரசனைச் சூழ்ந்திருப்பவரின் தொடர்பின்றி அவன் தீமை செய்வதும் இயலாது. அதனால், பழி அவரையே சாரும் என்பது கருத்து. "செய்தானை ஒவ்வாத பாவையோ இல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments