முகப்பு
தமிழ்மணி

சபாஷ் பேஷையா..!

தசாவதானி ஆறுமுகம் பிள்ளை என்பவரின் அவதான நிகழ்ச்சி ஒரு முறை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. நீதிபதி சேஷையர் இதற்குத் தலைமை தாங்கினார். அறிஞர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

தசாவதானி ஆறுமுகம் பிள்ளை என்பவரின் அவதான நிகழ்ச்சி ஒரு முறை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. நீதிபதி சேஷையர் இதற்குத் தலைமை தாங்கினார். அறிஞர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கேள்வியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அவதானியர் தட்டுத் தடங்கலின்றி பதிலளித்து வந்தார். இவரது புலமைத் திறனும், நினைவாற்றலும் அவையில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தன. 

தலைமை வகித்த நீதிபதி சேஷையர்,  அவதானியார் அளிக்கும் சரியான பதில்களைக் கேட்டு அவ்வப்போது, ""சபாஷ்... பேஷ்... பேஷ்...'' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

அந்த அவையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் அமர்ந்திருந்தார். உள்ளப் பூரிப்பில் மிதந்து கொண்டிருந்த தலைவர் சேஷையர், அவதான நிகழ்ச்சியைக் குறித்து கவிமணியின் கருத்தை அறியும் நோக்கில், ""தேசிய விநாயகம் பிள்ளையவர்களே... அவதானம் எப்படி?'' என்று கேட்டார்.

உடனே கவிமணி, "சேஷையர் மெச்சி, சபாஷ் பேஷையா என்ற பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது?' என்ற பொருளைத் தருகின்ற,

"ஆறுமுகம் பிள்ளை அவதானம் கண்டெளியேன்
வேறுமுகமன் கூற வேண்டுமோ? - தேறுமதி
சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்த சபாஷ்
பேஷையா என்ற பிறகு!'

என்ற பாடலைப் பாடினார். அவையில் இருந்தோர் கவிமணியின் பாடலைக் கேட்டு வியந்தனர்!

முழு கட்டுரையைப் படிக்க →